விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை தக்கவைக்க ஜோகோவிச்சுக்கு வாய்ப்பு

Published By: Digital Desk 5

27 Apr, 2022 | 12:08 PM
image

(என்.வீ.ஏ.)

கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றுக்கொள்ளாதவர்கள் இந்த வருட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

The Official Home of the Women's Tennis Association | WTA Tennis

இதற்கு அமைய நடப்பு விம்பிள்டன் சம்பியன் நொவாக் ஜோகோவிச்சுக்கு தனது சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆடவர் ஒற்றையருக்கான உலக டென்னிஸ் தரவரிசையில் முதலாம் இடத்தில் உள்ள 34 வயதான சேர்பிய வீரர் ஜோகோவிச்சுக்கு, இந்த வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் பங்குபற்ற முடியாமல் போனது.

2022 அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் நடப்பு சம்பியனாக பங்குபற்றுவதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த ஜொக்கோவிச், தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாததால் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் 'ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழைவதற்கு அரசாங்கம் வகுத்துள்ள விதிகளில் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டியது கட்டாயம் என்பது சேர்க்கப்படவில்லை' என ஊடக சந்திப்பில் அகில இங்கிலாந்து லோன் டென்னிஸ் கழகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சாலி போல்டன் தெரிவித்துள்ளார்.

'இது நிச்சயமாக உற்சாகம் அளிக்கும் செய்தியாக அமையும் அதேவேளை ஐக்கிய இராச்சியத்திற்குள்  நுழைவதற்கான நிபந்தனை அல்ல' என அவர் குறிப்பிட்டார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் ஜூன் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 10ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாததன் காரணமாக இந்த வருட முற்பகுதியில் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படாத ஜோக்கோவிச், அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இண்டியன் வெல்ஸ், மியாமி உட்பட இன்னும் சில டென்னிஸ் போட்டிகளை ஜோக்கோவிச் தவறவிட்டிருந்தார்.

அந்தக் காலப்பகுதியில் முதல் நிலை வீரர் என்ற அந்தஸ்தை டெனில் மெட்வடேவிடம் இழந்த ஜொக்கோவிச், மீண்டும் விளையாட ஆரம்பித்ததும் முதல் நிலையை தனதாக்கிக்கொண்டார்.

தனது சொந்த நாட்டில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற சேர்பிய பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய ஜோக்கோவிச், ரஷ்ய வீரர் அண்ட்றே ரூப்லெவ்விடம் தோல்வி அடைந்தார். 

இந்த வருடம் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் பங்குபற்றியது  அதுவே முதல் தடவையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41