ராஜஸ்தான் றோயல்ஸ் 29 ஓட்டங்களால் வெற்றி ; புள்ளி பட்டியலில் முதல் இடம்

Published By: Digital Desk 5

27 Apr, 2022 | 09:55 AM
image

(என்.வீ.ஏ.)

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் 29 ஓட்டங்களால் வெற்றியீட்டி அணிகள் நிலையில் 12 புள்ளிகளுடன் முதலாம் இடத்தை அடைந்துள்ளது.

Dinesh Karthik was run out in a bizarre manner, Rajasthan Royals vs Royal Challengers Bangalore, IPL 2022, Pune, April 26, 2022

ரியான் பரக்கின் சிறப்பான துடுப்பாட்டம், குல்தீப் சென் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரின் திறமையான பந்துவீச்சுகள் என்பன ராஜஸ்தான் றோயல்ஸை வெற்றி அடையச் செய்தன.

Kuldeep Sen had a dream start to his spell, picking two wickets in two balls, Rajasthan Royals vs Royal Challengers Bangalore, IPL 2022, Pune, April 26, 2022

பெங்களூர் சார்பாக ஜொஷ் ஹேஸ்ல்வுட், வனிந்து ஹசரங்க டி சில்வா, மொஹமத் சிராஜ் ஆகியோர் கட்டுப்பாட்டுடன் பந்துவீசிய போதிலும்   துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்காததால் அவ்வணி தோல்வியைத் தழுவியது.

Virat Kohli once fell for a low score, dismissed for 9 by Prasidh Krishna, Rajasthan Royals vs Royal Challengers Bangalore, IPL 2022, Pune, April 26, 2022

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

ஜொஸ் பட்லர் (8), தேவ்தத் படிக்கல் (7), ரவிச்சந்திரன் அஷ்வின் (17), அணித் தலைவர் சஞ்சு செம்சன் (27), டெரில் மிச்செல் (16) ஆகிய ஐவர் ஆட்டமிழக்க 15ஆவது ஓவரில் ராஜஸ்தானின் மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தது.

Riyan Parag is pumped up after reaching his half-century, Rajasthan Royals vs Royal Challengers Bangalore, IPL 2022, Pune, April 26, 2022

ஆனால், ரியான் பரக், தனி ஒருவராக போராடி 31 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்று ராஜஸ்தான் றோயல்ஸ் சுமாரான மொத்த எண்ணிக்கையை பெற உதவினார்.

மத்திய மற்றும் பின்வரிசையில் வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெறவில்லை.

பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வுட் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

145 ஓட்டங்கள் என்று இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

Kuldeep Sen celebrates with team-mates after getting Faf du Plessis, Rajasthan Royals vs Royal Challengers Bangalore, IPL 2022, Pune, April 26, 2022

ஆரம்ப வீரராக மீண்டும் களம் புகுந்த விராத் கோஹ்லி சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை அணிக்கு தாக்கத்தைக் கொடுத்தது. அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தவண்ணம் இருந்தன.

அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் (23), ரஜாத் பட்டிதார் (16), ஷாபாஸ் அஹ்மத் (17), வனிந்து ஹசரங்க  டி சில்வா   (18) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

க்ளென் மெக்ஸ்வெல் (0), தினேஷ் கார்த்திக் (6) ஆகிய இருவரும் மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

Kuldeep Sen celebrates with his skipper after helping Royals complete the win, Rajasthan Royals vs Royal Challengers Bangalore, IPL 2022, Pune, April 26, 2022

பந்துவீச்சில் குல்தீப் சென் 3.3 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ராசித் க்ரிஷ்ணா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35