புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைகள் குறைக்கப்பட மாட்டாது ; ஜனாதிபதி

Published By: Ponmalar

22 Oct, 2016 | 04:38 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடிப்படை வசதிகள் அற்ற விகாரைகளின் பட்டியலை முப்படையினர் ஊடாக பெற்றுக் கொண்டுள்ளேன். ஜனவரியில் இருந்து அவற்றின் அடிப்படை வசிதிகளை மேம்படுத்துவதே முதல் கட்ட பணியென  தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய  அரசியலமைப்பிலும் பௌத்த மதத்திற்கான கௌரவமும் முன்னுரிமையும் எவ்விதத்திலும் குறைக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, கோமரங்கடவல ரங்கிரி உல்பத்த ரஜமகா விகாரையின் புதிய வழிபாட்டுக்கான கட்டிடங்களை சாசனத்துக்கு அர்ப்பணிக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது  பிரதேசத்தின் ஐந்து விகாரைகளுக்கு புனித பூமி உறுதி ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகளில் தங்கியிருக்கும் மதகுருமார்களின் அடிப்படைத் தேவைகளான வதிவிடம், குடிநீர், மின்சாரம், மற்றும் சுகாதார வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

குறைந்த வசதிகளுடைய விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட பௌத்த புனருதய நிதியத்துக்கு பெருமளவு நிதி கிடைத்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடிப்படை வசதிகள் இல்லாத விகாரைகளின் பட்டியலையும் முப்படையினர் ஊடாக பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பௌத்த சாசனத்தை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் தற்போதய நல்லாட்சி அரசு கடப்பாட்டைக் கொண்டுள்ளது.

தற்போதுள்ள அரசியலமைப்பில் பௌத்த மதம் தொடர்பில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு பிரிவும் அகற்றப்படமாட்டாதென்பதுடன் அரசாங்கத்தை அரசியல் ரீதியில் எதிர்ப்போர் இது தொடர்பில் முன்னெடுத்துவரும் போலியான பிரச்சாரங்கள் தொடர்பில் கவலையடைவதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41