பண்டாரவளை - போகெட்டியாராவ பிரதேசத்தில் சகோதரனை  கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சகோதரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

குடும்ப பிரச்சினையே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.