புகையிரத சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் - புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை !

Published By: Digital Desk 4

26 Apr, 2022 | 09:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை பலப்படுத்தும் வகையிலும், ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும்  என்பற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலும் புதன்கிழமை (27) நள்ளிரவு முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம்.

வியாழக்கிழமை (28) புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் என புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் செயலாளர்  எஸ்.பி விதானகே தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் புகையிரத சேவையை பயன்படுத்தும் பொதுபயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

நாட்டுக்காக ஒருசில கடினமான தீர்மானங்களை முன்னெடுக்க நேரிடும். நாட்டுக்கான எமது போராட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மருதானையில் உள்ள புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தின் விளைவை நாட்டு மக்கள் தற்போது எதிர்க்கொள்கிறார்கள்.

வரிசையில் நின்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளன. மக்களாணைக்கு முரணாக செயற்பட்டதன் காரணமாகவே ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்தை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணிக்கிறார்கள்.

புகையிரத தொழிற்சங்கங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக உள்ளார்கள்.இருப்பினும் தற்போது அரசியலுக்கு முன்னுரிமை வழங்க முடியாது.

நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காலி முகத்திடலில் இளைஞர்கள் பல நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்கங்களும் அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் நோக்கமற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானித்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம்.

புதன்கிழமை (27) நள்ளிரவு வியாழக்கிழமை (28) நள்ளிரவு வரை புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும். புகையிரத சேவையில் ஈடுப்படும் 30 தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவதால் புகையிரத சேவை பகுதி அளவில் கூட முன்னெடுக்கப்படமாட்டாது.

 புகையிரத சேவை ஸ்தம்பிதமடைவதால் பொது பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.தொழில் உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடப்படவில்லை.அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம். எமது போராட்டத்திற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55