சீனாவின் நிலைப்பாடு தொடர்பில் உரிய வகையில் செயற்படுவோம் ; சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு முக்கியமானது – அரசாங்கம்

Published By: Digital Desk 3

26 Apr, 2022 | 04:34 PM
image

(எம்.மனோசித்ரா)

சீனாவின் நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கம் உரிய வகையில் செயற்படும். பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வு நோக்கிய இலங்கையின் பயணத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்த அணுகுமுறை குறித்து மேற்குலக நாடுகள் பலவும் இலங்கைக்கு ஆதரவளித்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாண்பதற்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்துடன் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர். அதற்கமைய இலங்கைக்கு உதவுவதற்கு தயார் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் திங்கட்கிழமை (25) ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய இலங்கைக்கான சீன தூதுவர் , 'சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பானது சீனாவின் இலங்கைக்கான கடன் உதவிகளில் தாக்கம் செலுத்தும்.' என்று அறிவித்திருந்தார்.

சீன தூதுவரின் இந்த கருத்து தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட போது அமைச்சரவை பேச்சாளர் நாலக கொடஹேவா மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடிகளால் எமக்கு 4 - 5 பில்லியன் டொலர் அவசர நிதி உதவி தேவையாகவுள்ளது.

இது தொடர்பிலேயே நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்தோடு எமக்கு கடன்களை மீள செலுத்தக் கூடிய இயலுமை இல்லை என்பதை அறிவித்துள்ளதோடு , கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்காக எமக்கு கடன் வழங்கியுள்ள நாடுகளிடம் கடனை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்துக் கொள்வதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

எமக்கு கடன் வழங்குபவர்களின் மேற்குலக நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பை ஏற்று எமக்கு ஒத்துழைப்ப முன்வந்துள்ளன.

எனினும் சீனா உலகலாவிய ரீதியில் பல நாடுகளுக்கும் கடன்களை வழங்கியுள்ளது. எனவே ஒரு நாட்டுக்கு மாத்திரம் கடன் மறுசீரமைப்பிற்கான வாய்ப்பினை வழங்கினால் அது ஏனைய நாடுகளிலும் தாக்கம் செலுத்தும் என்ற நிலைப்பாட்டிலேயே சீனா உள்ளது.

எனவே தான் கடன் மறுசீரமைப்பிற்கு பதிலாக சீனாவிற்கான கடனை மீள செலுத்துவதற்காக மேலதிக கடனை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது அடிப்படை பேச்சுவார்த்தை மட்டத்திலேயே காணப்படுகிறது. நிதி அமைச்சர் இது தொடர்பில் விரிவாக பாராளுமன்றத்திற்கு அறிவிப்பார். இதன் போது மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44