சீனா எவ்வாறு மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவை இழந்தது

Published By: Digital Desk 4

26 Apr, 2022 | 01:28 PM
image

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் கவனம் தற்போது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், சீனாவின் பார்வையும் மாறிவிட்டது. சீனா ரஷ்யாவை ஆதரிப்பதாகக் கருதப்பட்டால், பெய்ஜிங் மொஸ்கோவுடன் இணைந்து வெளிப்படையான அச்சுறுத்தலுக்குள் விழும் அபாயம் உள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, பெரும்பாலான மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் திறன்கள் அவற்றின் வரம்புகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.

எல்லையில் உள்ள நாடுகள் உக்ரேனிய அகதிகளின் வருகையை சமாளிக்கின்றன. சிலர் உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை வாங்குவதற்கும் கொண்டு செல்வதற்கும் ஏற்பாடு செய்கிறார்கள். 

பனிப்போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கிற்கு ரஷ்யா முன்வைத்த சவால்களை அனைவரும் மதிப்பிடுகின்றனர். எல்லையில் அனைத்து கண்களும் ரஷ்யாவை நோக்கி இருக்கும் போது, சீனா திடீரென்று தொலைதூர சக்தியாகத் தெரிகிறது. ஆனாலும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா சீனாவை மறந்துவிடவில்லை.

அதே போன்று பெய்ஜிங்கில் கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகளின் போது  ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புடின் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கையில் நேட்டோவை விரிவுபடுத்துவதற்கான எதிர்ப்பில் பெய்ஜிங் ரஷ்யாவை ஆதரித்தது என்பது கவனிக்கப்படாமல் போகவும் இல்லை. நேட்டோ எல்லைகளை 1997க்கு முந்தைய நிலைமைக்கு மாற்றுவதற்கான ரஷ்ய கோரிக்கைகளுக்கு ஆதரவாக இந்த செய்தியை குறிப்பிடலாம். 

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போலந்து, செக்கியா, ஸ்லோவாக்கியா மற்றும் பால்டிக் நாடுகள் உட்பட கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பாலான துருப்புக்கள் அல்லது ஆயுதங்களை அகற்றுமாறு புடின் நேட்டோவிடம் கோரும் மொஸ்கோவின் டிசம்பர் முன்மொழிவுகளை சீனா ஆதரித்தது.

ஒரு தசாப்தத்திற்கு முன்பு சீனா மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புகளை தொடங்கியது. ரஷ்யா, ஜேர்மனி மற்றும் அமெரிக்கா உட்பட இப்பகுதியில் வரலாற்று ரீதியாக இருந்த மற்ற சக்திகளுடன் சீனா இணைந்தது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலில் சீனாவின் ஆர்வத்தை வரவேற்றன. ஏனெனில் அந்த நாடுகள் பெரும்பாலும் மேற்கு நோக்கிய வர்த்தகப் பாதைகளை பல்வகைப்படுத்துவதற்கான வாய்ப்பாகக் கருதின.

எனினும் இந்த எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறவில்லை. ஐரோப்பாவிற்கான ஒட்டுமொத்த சீன முதலீடு 2016 முதல் 2020 வரை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா 2020 இல் வெறும் 3 சதவீதத்தையே பெற்றுக்கொண்டது.  

மறுப்புறம் தைவானுடனான உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்த நாடுகளுக்கு அரசியல் அச்சுறுத்தல்களை சீனா விடுத்தது. சீனாவுடனான ஒத்துழைப்பிலிருந்து உறுதியான முடிவுகள் இல்லாததால்; ஏமாற்றம் மேலும் தீவிரமடைந்தது. செக் செனட் தலைவர் 2020 இல் தைவானின் உத்தியோகபூர்வ விஜயத்திற்கு 'பெரிய விலை கொடுக்க வேண்டும்' என்று சீனா எச்சரித்தது. 

பத்து வருடங்களுக்கு முன்பு மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சீனாவை ஒரு பொருளாதார வாய்ப்பாக பார்த்தது. பெரும்பாலான நாடுகள் (ஹங்கேரி மற்றும் செர்பியாவைத் தவிர) பொருளாதாரப் பலன்கள் மாயையாக இருக்கலாம் என்பதையும், சீனாவுடனான ஒத்துழைப்பால் ஏற்படும் கணிசமான அரசியல் மற்றும் பாதுகாப்பு அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் தற்போது  புரிந்துகொண்டுள்ளதால் நிலைமை மாறிவிட்டது.

ஐரோப்பிய பாதுகாப்பு கட்டிடக்கலை மறுவடிவமைப்பு குறித்த ரஷ்யாவின் கூற்றுக்களை ஆதரிக்கும் சமீபத்திய சீனாவின் முடிவு, சீனாவின் நோக்கங்கள் குறித்த பிராந்தியத்தின் வளர்ந்து வரும் கவலைகளை வலுப்படுத்துகின்றது. உக்ரைனுக்கு அருகாமையில் உள்ள மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தங்களின் போதிய இராணுவச் செலவீனங்களை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளது. இது ரஷ்யப் படையெடுப்பு பின்னரான பிரதிப்பளிப்பாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47