துரத்தி பிடிக்க முடியாவிட்டால் 1000 சீசீ மோட்டார் சைக்கிள் எதற்கு? முழந்தாளுக்கு கீழே சுட தெரியாவிட்டால் பொலிஸ் பயிற்சி எதற்கு? : மனோ கேள்வி

Published By: MD.Lucias

22 Oct, 2016 | 01:20 PM
image

பழுலுல்லாஹ் பர்ஹான்       

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் படுகொலைகள் என கருத வேண்டிய சாட்சியங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. பொலிஸ் காவலரணில் நிறுத்தாமல் செல்வோரை துரத்தி பிடிக்கவே, பொலிஸாருக்கு அதி நவீன 1000சீசீ மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. காவலரணில் நிற்காமல் வேகமாக போனவர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்துக்கொண்டு போனதாக தகவல் இல்லை. இந்நிலையில் ஏன் சுட வேண்டும் என தெரியவில்லை. ஆகவே அவர்களை துரத்தி சென்று வழிமறித்து பிடிக்க வேண்டும். அப்படியே சுட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முதலில் ஆகாயத்தை நோக்கியும்,பின்னர் முழந்தாளுக்கு கீழேயும் சுட வேண்டும் என்ற விதிகள்  மூன்றாம் வகுப்பு குழந்தைக்கும் தெரியும். இவை பயிற்சி பெற்ற இந்த போலிசாருக்கு தெரியவில்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு கொட்டாஞ்சேனையில் இன்று இடம்பெற்ற தனது அமைச்சின் “அரசசேவை உங்களுக்காக” என்ற தொனிப்பொருளிலான நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சில வாரங்களுக்கு முன் மலையகத்தில் புசல்லாவையில் ஒரு இளைஞர் பொலிஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்தார். 

இப்போது  யாழ்ப்பாணத்தில் இந்த இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 

நம் நாட்டுக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. சபையின் சிறுபான்மை விவகார அறிக்கையாளர் ரீடா ஐஷக் இங்கே இருக்கும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் இன்னமும் நிலைமை கேவலமாக இருந்து இருக்கும்.

எங்களுக்கு இராணுவம் வேண்டாம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் சிவில் பொலிஸ் எங்கள் நண்பர்கள் என்று இன்று சொல்ல தொடங்கி இருக்கும் யாழ்ப்பாணத்து மக்களை மீண்டும் பொலிஸ் மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கும் சம்பவங்கள் இவை. 

பொலிஸ் துறை தொடர்பில் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்த, குற்றம் இளைத்தோர் மீது கடும் நடவடிக்கைகள்  சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58