150 மீற்றர் ஓட்டத்தில் ஆசிய சாதனை படைத்தார் யுப்புன்

26 Apr, 2022 | 10:47 AM
image

(என்.வீ.ஏ.)

தெற்காசியாவின் அதிவேக வீரர் யுப்புன் அபேகோன், ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இத்தாலியில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற பேர்சோ கிண்ணம் 2022 மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டு இத்தாலி வீரர்களின் சவால்களை முறியடித்து யுப்புன் அபேகோன் வெற்றிபெற்று    புதிய ஆசிய சாதனையை    படைத்தார் 

அப் போட்டியை 15.16 செக்கன்களில் நிறைவு செய்த யுப்புன் அபேகோன், இந் நிகழ்ச்சிக்கான புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டினார்.

இதன் மூலம் ஜப்பான் வீரர் யோஷிஹைத் கிரியு 2017ஆம் ஆண்டு நிலைநாட்டியிருந்த 15.35 செக்கன்கள் என்ற முந்தைய ஆசிய சாதனையை யுப்புன் அபேகோன் முறியடித்தார்.

இத்தாலியில் நடைபெற்ற 150 மீற்றர் ஓட்டப் போட்டியில் அந் நாட்டைச் சேர்ந்த சிட்டுர அலி (15.17 செக்.) 2ஆம் இடத்தையம் மாட்டியா பேர்லானி (15.76 செக்.) 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

இப் போட்டியில் பங்குபற்றிய மற்றொரு இலங்கையரான விநுர விமல் (16.83 செக்) பிரகாசிக்கத் தவறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35