உலகின் மிகவும் வயதான நபர் ஜப்பானில் காலமானார்

Published By: Digital Desk 3

26 Apr, 2022 | 10:14 AM
image

உலகின் மிகவும் வயதானவர் என்ற பெருமை பெற்ற ஜப்பானின் புகுவோகா நகரைச் சேர்ந்த மூதாட்டியான கேன் தனகா கடந்த 19 ஆம் திகதி தன்னுடைய 119 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

1903 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி பிறந்த கேன் தனாகா, கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் தன்னுடைய 116-வது வயதில் மிகவும் வயதான நபர் என்ற கின்னஸ் சாதனை படைத்தார். 

கேன் தனகா

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் 117 வயது மற்றும் 261 நாட்களை எட்டியபோது, ஜப்பானில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வயதான நபராகவும் ஆனார். 

தனகா தன்னுடைய 19-வது வயதில் அரிசி கடை வைத்திருந்தவரை திருமணம் செய்து கொண்டார். சோடா மற்றும் சாக்லேட் உள்ளிட்ட ருசியான உணவுகளை உண்பதுடன் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது தன்னுடைய ஆயுளை அதிகரித்ததாக தனகா முன்பு குறிப்பிட்டிருந்தார்.

தனகா காலமானதையடுத்து, பிரெஞ்சுப் பெண்மணியான லூசில் ராண்டன் இப்போது உலகின்மிக வயதான நபராக உள்ளார். அவரது வயது 118 ஆண்டு மற்றும் 73 நாட்கள் ஆகும். ஜப்பானின் மிக வயதான நபர் இப்போது ஒசாகா மாகாணத்தில் வசிக்கும் 115 வயதான ஃபுசா டாட்சுமி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52