சென்னை சுப்பர் கிங்ஸின் ப்ளே ஓவ் வாய்ப்பு கேள்விக்குறியில் !

Published By: Digital Desk 5

26 Apr, 2022 | 10:00 AM
image

(என்.வீ.ஏ.)

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான ஐ.பி.எல். இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 12 ஓட்டங்களால் தோல்வி அடைந்த நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸின் ப்ளே ஓவ் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

MS Dhoni powers the ball down the ground, Chennai Super Kings vs Punjab Kings, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 25, 2022

இந்த இரண்டு அணிகளும் இம் மாதம் முற்பகுதியில் மோதிக்கொண்டபோதும் பஞ்சாப் கிங்ஸ் 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.

ஷிக்கர் தவானின் நிதானமும் வேகமும் கலந்த ஆட்டமிழக்காத அரைச் சதம், கடைசிக் கட்டத்தில் கெகிசோ ரபாடா,  அர்ஷ்தீப் சிங்  ஆகியோரின் கட்டுப்பாடான பந்துவீச்சுகள் என்பன பஞ்சாப் கிங்ஸை வெற்றிபெறச் செய்தன.

அம்பாட்டி ராயுடு தனி ஒருவராக போராடியபோதிலும் 18ஆவது ஓவரில் அவர் ஆட்டமிழந்ததும் சென்னை சுப்பர் கிங்ஸின்  எதிர்பார்ப்பு தகர்ந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

Mukesh Choudhary celebrates with MS Dhoni after taking the catch to dismiss Liam Livingstone, Chennai Super Kings vs Punjab Kings, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 25, 2022

ஆரம்ப வீரர் மயன்க் அகர்வால் (18) ஆட்டமிழந்தபோது 6ஆவது ஓவரில் பஞ்சாப் கிங்ஸின் மொத்த எண்ணிக்கை 37 ஓட்டங்களாக இருந்தது.

அதன் பின்னர் ஷிக்கர் தவானும் அணிக்கு மீளழைக்கப்பட்ட பானுக்க ராஜபக்ஷவும் 2ஆவது விக்கெட்டில் 110 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

கடந்த 4 போட்டிகளில் விளையாடாமல் இருந்த பானுக்க ராஜபக்ஷ, தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி திறமையாகத் துடுப்பெடுததாடி 32 பந்துகளில் 2 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 42 ஓட்டங்களைக் குவித்தார்.

மறுபுறத்தில் 20 ஓவர்களும்   தாக்குப்பிடித்து துடுப்பெடுத்தாடிய ஷிக்கர் தவான் 59 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 88 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

லியாம் லிவிங்ஸ்டோன் (19), ஜொனி பெயார்ஸ்டோ (6) ஆகிய இருவரும் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்து விக்கெட்களை இழந்தனர்.

Kagiso Rabada broke the burgeoning fourth-wicket stand with Ruturaj Gaikwad's wicket, Chennai Super Kings vs Punjab Kings, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 25, 2022

சென்னை பந்துவீச்சில் ட்வேன் ப்ராவோ 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். மஹீஷ் தீக்ஷன கட்டுப்பாட்டுடன் பந்துவீசி 4 ஓவர்களில் 32 ஓட்டஙகளுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நொக்கி பதிலுக்கு துடுப்பெடுததாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் 6ஆவது தோல்வியைத் தழுவியது.

ரொபின் உத்தப்பா (1), மிச்செல் சென்ட்னர (9), ஷிவம் டுபே (8) ஆகிய மூவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழக்க 7 ஓவர்கள் நிறைவில் சென்னை 40 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

இந் நிலையில் களம்புகுந்த சூட்டோடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பாட்டி ராயுடு, ஆரம்ப வீரர் ருத்துராஜ் கய்க்வாட் 30 ஓட்டஙகளைப் பெறுவதற்கு முன்னரே அந்த எண்ணிக்கையைக் கடந்து விட்டார்.

அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 49 ஒட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ருத்துராஜ் கய்க்வாட் 30 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

Jonny Bairstow is run out by MS Dhoni off the final ball, Chennai Super Kings vs Punjab Kings, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 25, 2022

அம்பாட்டி ராயுடுவும் அணித் தலைவர் ரவிந்த்ர ஜடேஜாவும் 5ஆவது விக்கெட்டில் 32 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து சென்னைக்கு நம்பிக்கை ஊட்டினர்.

ஆனால், 18ஆவது, 19ஆவது ஓவர்களை கெகிசோ ரபாடா (6 ஓட்டங்களுக்கு 1 விக்.), அர்ஷ்தீப் சிங் (8 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வீசி சென்னைக்கு அழுத்தத்தைக் கொடுத்தனர்.

கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு மேலும் 27 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ரிஷி தவான் வீசிய முதல் பந்தில் சிக்ஸை விளாசிய எம்.எஸ். தோனி, 3ஆவது பந்தில் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சென்னைக்கு இருந்த அற்பசொற்ப நம்பிக்கையும் அற்றுப்போனது.

ரவிந்த்ர ஜடேஜா 21 ஓட்டங்களுடனும் ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரிஷி தவான் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Rishi Dhawan is pumped up after picking up the wicket of Shivam Dube, Chennai Super Kings vs Punjab Kings, IPL 2022, Wankhede Stadium, Mumbai, April 25, 2022

திங்கட்கிழமைவரை நிறைவுபெற்றுள்ள 38 போட்டி முடிவுகளின் பிரகாரம் குஜராத் டைட்டன்ஸ் 7 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான், றோயல்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முறையே  2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் இடங்களில் இருக்கின்றன.

நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் 4 புள்ளிகளுடன் 9ஆம் இடத்திலும் 5 தடவைகள் சம்பியனான மும்பை இண்டியன்ஸ் விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்திலும் இருக்கின்றன. 

இந்த இரண்டு அணிகளும் இம்முறை ப்ளே ஓவ் சுற்றுக்கு முன்னேறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41