ஐ,சி.சி. யின் பொது முகாமையாளராக வசிம் கான் நியமனம்

Published By: Digital Desk 4

24 Apr, 2022 | 09:56 PM
image

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) கிரிக்கெட் பொது முகாமையாளராக வசிம் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை உறுதிசெய்த ஐ.சி.சி, புதிய பதவியை  வசிம் கான் மே மாதத்திலிருந்து பொறுப்பேற்பார் எனவும் தெரிவித்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, லெஸ்டர்ஷயர் கவுன்டி கிரிக்கெட், சான்ஸ் டூ ஷைன் ஆகியவற்றில் இதற்கு முன்னர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக வசிம் கான் பதவி வகித்திருந்தார்.

கடந்த 8 வருடங்களாக ஐ.சி.சி கிரிக்கெட் பொது முகாமையாளராக பதவி வகித்தவரும் தற்போது பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றுபவருமான ஜெவ் அலார்டைஸிடமிருந்து கிரிக்கெட் பொது முகாமையாளர் பதவியை வசிம் கான் பொறுப்பேற்கவுள்ளார்.

வசிம் கானின் நியமனம் குறித்து பேசிய ஜெவ்  அலார்டை ஸ், 'வசிம் கானை ஐ.சி.சிக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். எமது கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த அனுபவம் கொண்டவரும் சர்வதேச கிரிக்கெட் கட்டமைப்பில் அனுபவம் கொண்டவருமான வசிம் கானின் வருகை சிறந்த பலனைத் தரும். உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டை விஸ்தரிக்க ஐசிசி எடுத்துவரும் முயற்சிகளுக்கும் எமது புதிய நிகழ்ச்சிகளுக்கான நகர்வுகளுக்கும் அவரது பிரசன்னம் முக்கியமாகும்' என்றார்.

தனக்கு கிடைத்த பதவி குறித்து கருத்து வெளியிட்ட கான், 'ஐ.சி.சியில் இணைவதையிட்டு நான் பெருமை அடைகின்றேன். எனது பணிகளை ஆரம்பித்து, உறுப்பு நாடுகளுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட்டை மேலும் விஸ்தரிப்பதற்கு எனது பணியை விரைவில் ஆரம்பிக்கவேண்டும் என்பதற்காக காத்திருக்கின்றேன். 

மகளிர் கிரிக்கெட்டை விஸ்தரிப்பதில் ஐ.சி.சி கொண்டுள்ள அர்ப்பணிப்புத்தன்மை குறித்து நான் பூரிப்படைகின்றேன். அடுத்த தசாப்தத்தில் அதன் வளர்ச்சியில் எனது பங்களிப்பை விரைவுபடுத்த எதிர்பார்த்துள்ளேன்' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43