புங்குடுதீவு கடற்பகுதியில் சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 3 மீனவர்களை  கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு ரோந்துப் படகு, 4 சுழியோடி முகமூடிகள், 3  சுழியோடி காலணிகள் உட்பட 4 கடலைட்டைகளும் கைப்பற்றப்பட்டன. 

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.