மட்டு வாழைச்சேனையில் போதை பொருட்களுடன் 20 வயது யுவதி கைது 

Published By: Digital Desk 4

24 Apr, 2022 | 04:45 PM
image

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை 780 மில்லிக்கிராம் ஹரோயின், 2784 மில்லிக்கிராம் கேரள கஞ்சா, 5  போதை மாத்திரைகளுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) பகல் கைது செய்து வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் வீடு தீக்கிரை - இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது  | Virakesari.lk

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று பகல் பிறந்துறைச்சேனை கோவில் வீதியில் உள்ள  குறித்த பெண்ணின் வீட்டை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் முற்றுகையிட்டனர்.

இதன் போது போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய பெண்ணை கைது செய்ததுடன் 780 மில்லிக்கிராம் ஹரோயின், 2784 மில்லிக்கிராம் கேரள கஞ்சா, 5  போதை மாத்திரைகளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட குறித்த பெண் ஏற்கனவே இரண்டு தடவைகள் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08