பிலிப்பைன்ஸ் நாட்டை சூறை­யா­டிய ‘ஹைமா’ புய­லுக்கு 12 இற்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகா­ணங்­களை நேற்­று­முன்­தினம் மணிக்கு சுமார் 225 கிலோ­மீற்றர் வேகத்தில் ‘ஹைமா’ என்ற பெரும்­புயல் தாக்­கி­யது. புயலை தொடர்ந்து பலத்த மழையும் பெய்­ததால் பல இலட்சம் ஏக்கர் பரப்­ப­ளவு கொண்ட நிலங்­களில் பயி­ரி­டப்­பட்­டி­ருந்த நெல் மற்றும் சோளப் பயிர்கள் வெள்­ளத்தில் மூழ்கி நாச­ம­டைந்­தன.

நாட்டின் வட­ப­கு­தியில் வாழும் சுமார் ஒரு­கோடி மக்கள் இந்த புயலால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில், மழை வெள்ளம் சார்ந்த விபத்­து­களில் 12 பேர் உயி­ரி­ழந்­தனர்.

தீவிரம் தணிந்து மணிக்கு சுமார் 100 கிலோ­மீற்றர் வேகத்தில் அரு­கா­மையில் உள்ள ஹொங்கொங் நகரை நோக்கி நெருங்­கிய ‘ஹைமா’ புயல் அங்கும் மிகப்­பெ­ரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தலாம் என்று அஞ்­சப்­பட்­டது. ஆனாலும் தற்போது அதன் வீரியம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.