பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கு ஆதரவாக இலண்டனில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

”ஆறு ஏழு தலைமுறையாய் மாடாய் நாம் உழைத்து ஆணி முனையில் கூட சொந்த காணியில்லை”, “திண்று கொழுக்கும் திமிங்கலங்கள் கூட்டு சேர்ந்து  கொள்கை வகுக்கும்“, “எவனெவனோ  சொகுசா வாழ எங்கள் உயிரை இங்கு மாய்த்தோம்“ என்று கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும்,அவர்கள் கைகளில் மும்மொழிகளில் எழுதப்பட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.