பல்கலை மாணவர்கள் மரணம் ; சுவாமிநாதன் வடக்கு மக்களிடம் கோரிக்கை

Published By: Ponmalar

21 Oct, 2016 | 07:22 PM
image

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து பக்கச்சார்பற்ற நடவடிக்கைகள் உடன் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வடபகுதி மக்கள் குழப்பமடைய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

யாழ்.நகரை அண்மித்த கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு அருகாமையில் மோட்டார்சைக்கிளில் சென்ற இரு பல்கலைக்கழக மாணவர்கள் விபத்துக்குள்ளாகி மரணமானதாக தெரிவிக்கப்பட்ட போதும் அவர்களது மரணம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருந்தன. 

யாழ்ப்பாணத்தில் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த என்னிடத்தில் இவ்விடயம் தொடர்பாக கவனத்தில் கொண்டுவரப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துமாறும் பணித்திருந்தார். 

அதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினேன். அதற்கமைவாக இன்று மாலையளவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலான ஐந்து பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு தற்காலிகமாக பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மரணமடைந்த இரு இளம் பல்கலை மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற வகையில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் தொடர்ந்தும் உரிய முறையில் இடம்பெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதோடு வடபகுதி மக்கள் குழப்பமடையாது இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55