இந்தியாவிடமிருந்து 101 வகையான மருந்துகள் நாட்டை வந்தடைய உள்ளது - சுகாதார அமைச்சர்

Published By: Digital Desk 3

23 Apr, 2022 | 03:54 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள 101 வகையான மருந்துகளும் சத்திரசிகிச்சை உபகரணங்களும் எதிர்வரும் புதன்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இது இந்திய கடற்படையின் காரியல் என்ற கப்பல் ஊடாக இவை நாட்டை வந்தடையவுள்ளன.

இதேவேளை, இந்தோனேசிய அரசாங்கத்திடம் இருந்து 340 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் காணப்படும் டொலர் நெருக்கடியால் பல்வேறுபட்ட மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சத்திர சிகிச்சைகள் கூட இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே இலங்கைக்கு அவசர மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு சர்வதேசம் முன்வந்துள்ளது. அதற்கமைய உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 1.37 மில்லியன் பெறுமதியான மருத்துவ உதவிகள் அடுத்த மாதமளவில் கிடைக்கப் பெறவுள்ளது. மேலும் தாய்லாந்திடமிருந்து 340 மில்லியன் பெறுமதியான மருந்துகளும் கிடைக்கப்பெறவுள்ளன.

இவை தவிர பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக 100,000 அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கடந்த வாரம் அறிவித்துள்ளது.

மேலும் வாஷிங்டன் சென்றுள்ள நிதி அமைச்சர் தலைமையிலான குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பிற்கமைய மருந்து கொள்வனவிற்காக 21.7 மில்லியன் டொலர்களை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08