இந்தியாவின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது - வீரசுமன வீரசிங்க

Published By: Digital Desk 3

23 Apr, 2022 | 04:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ளும் வரை நட்பு நாடுகளுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

இந்திய கடனுதவி திட்டத்தை தவிர்த்து அரசாங்கத்திடம் மாற்று திட்டங்கள் ஏதும் கிடையாது . இந்தியாவின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரையும் சந்திக்க எதிர்பார்த்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

அரசாங்கததிலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 7 உறுப்பினர்களுக்கும், சீனாவிற்கான இலங்கை தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் இடம்பெற்றது. 

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு தொடர்ச்சியாக பல்வேறு கட்டமைப்பின் கீழ் ஒத்துழைப்பு வழங்குமாறு சீன தூதுவரிடம் சுயாதீன தரப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இச்சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும்,சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பு குறித்து இச்சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர,அத்துரலியே ரத்ன தேரர்,அநுரபிரியதர்ஷன யாப்பா,உதய கம்மன்பில,வீரசுமன வீரசிங்க,வாசுதேவ நாணயக்கார மற்றும் ஜகத் புஸ்பகுமார ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

சீன தூதுவருடனான சந்திப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க குறிப்பிட்டதாவது,

இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதனுடனான சமூக பாதிப்பு குறித்து சீன அதிக அவதானம் செலுத்தியுள்ளது.

நாட்டு மக்களின் நலன் கருதி சீனா மனிதாபிமான அடிப்படையில் ஒத்துழைப்புக்களை வழங்க தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

பொருளாதார நெருக்கடி ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வறுமை கோட்டில் வாழும் மக்கள் ஒரு வேளை உணவை பெற்றுக்கொள்வதும் தற்போது சவால்மிக்கமாக காணப்படுகிறது.

இலங்கைக்கு தொடர்ச்சியாக பல்வேறு கட்டமைப்பின் கீழ் ஒத்துழைப்பு வழங்குமாறு சீனாவிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இலங்கைக்கு சீனா பல்வேறு வழிமுறைகளில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.மனிதாபிமான அடிப்படையிலும் ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம் என சீன தூதுவர் உறுதியளித்துள்ளார்.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வரை நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தனிப்பட்ட முறையில் அந்நாட்டு தூதுவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம்.

இந்திய கடனுதவி திட்டத்தை தவிர்த்து அரசாங்கத்திடம் மாற்று திட்டம் ஏதும் கிடையாது. நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரையும் சந்திக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38