துப்பாக்கிச் சூடு நடாத்த ஒருபோதும் ஆலோசனை வழங்கவில்லை - மனித உரிமைகள் ஆணைக் குழுவில் பொலிஸ் மா அதிபர் 

Published By: Digital Desk 4

22 Apr, 2022 | 08:56 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பொது மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகங்களை முன்னெடுக்க, பொலிஸ் மா அதிபர் எனும் ரீதியில் ஒரு போதும்  தான் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கவில்லை என  பொலிஸ்  மா அதிபர் சந்தன  விக்ரமரத்ன  இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் வெள்ளிக்கிழமை ( 22) தெரிவித்தார்.

Articles Tagged Under: சந்தன விக்ரமரத்ன | Virakesari.lk

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அது குறித்த நடவடிக்கைகளுக்காக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உள்ளிட்ட 6 உயர் பொலிஸ் அதிகாரிகளை  வெள்ளிக்கிழமை  (22) மனித உரிமைகள் ஆணைக் குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்தது. 

பொலிஸ் மா அதிபர் , சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ( மத்திய மாகாணம்), பிரதிப் பொலிஸ் மா அதிபர் ( மத்திய மாகாணம்), கேகாலை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சர்,  மற்றும் ரம்புக்கனை, கேகாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளையே,  வெள்ளிக்கிழமை (22) முற்பகல் 11.00 மணிக்கு இவ்வாறு ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன்படி முற்பகல் 11.00 மணிக்கு பம்பலபிட்டியில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்னவுடன் பொலிஸ் மா அதிபர் ஆஜரானார். அத்துடன் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் இதன்போது பிரசன்னமானார். 

இந் நிலையிலேயே  இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு பொலிஸ்  மா அதிபரிடம் சுமார் இரு மணி நேரம் விசாரணைகளை நடத்தியது. இதன்போதே, பொது மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த எந்த ஆலோசனைகளையும் தான் பொலிசாருக்கு வழங்கவில்லையென அவர் குறிப்பிட்டார்.

ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நால்வர் அடங்கிய விசேட குழுவொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நியமித்தது.

 சுலாரி லியனகம, மேனகா ஹேரத், லால் வீரசிங்க மற்றும்  ஏ.எஸ். நிலந்த ஆகியோர்  கொண்ட குழுவே இவ்வாறு நியமிக்கப்பட்டது. அவர்கள் ரம்புக்கனையில்  விசாரணைகளை ஆரம்பித்த நிலையிலேயே, அதன் தொடர்ச்சியான விசாரணைகளுக்காக இந்த பொலிஸ் உயர் அதிகாரிகளையும் அழைத்திருந்தனர். இன்று மூன்று  பொலிஸ்  உத்தியோகத்தர்கள் மட்டுமே இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51