ஜனாதிபதி செயலகத்திற்குக் கூட செல்ல முடியாத ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ -  முஜிபூர் ரஹ்மான்

Published By: Digital Desk 4

22 Apr, 2022 | 08:47 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆளும் தரப்பினை காட்டிலும் எதிர்தரப்பின் பலம் அதிகமாக உள்ளது. புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகத்துறை அமைச்சர் நாலக கொடஹேவா பதவி விலகலை கடந்த 20ஆம் திகதியே ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளார். 

ஐ.தே.க வை தன்வசப்படுத்த ஜனாதிபதி முயற்சிக்கின்றார் : முஜிபூர் | Virakesari .lk

ஜனாதிபதி செயலகத்திற்கு கூட செல்ல முடியாத ஒரே ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ உள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (22) உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு நடைமுறைக்கு சாத்தியமான எவ்வித தீர்மானங்களையும் முன்வைக்கவில்லை.

அரசாங்கததின் பெரும்பான்மை பலம் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. அரசாங்கத்திற்கு சாதாரண பலம் மாத்திரமே உள்ளது.

அரசாங்கத்தில் ஒரு தரப்பினர்  பிரதமருக்கு ஆதரவு வழங்குவதாக  குறிப்பிட்டுக்கொள்கிறார்கள். பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி குழு கூட்டத்தில் 88 பேர் மாத்திரம் கலந்துக்கொண்டனர்.

மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 10 பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள்  புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

புதிய அமைச்சரவை கடந்த 18 ஆம் திகதி நியமிக்கப்பட்டது. ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்ற நாலக கொடஹேவா பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் எதனையும் செய்ய முடியாது என்பதை அவர் நன்கு அறிந்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு கூட செல்ல முடியாத நிலைமை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து கோ ஹோம் கோடா என   எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19