21 ஆவது திருத்த தனி நபர் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

Published By: Digital Desk 5

22 Apr, 2022 | 05:14 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்,இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் உத்தேச 21 ஆவது திருத்தம் தொடர்பில் பல தரப்பினரிடமிருந்து யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  குறித்த யோசனைகள் சட்டமாதிபரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர்  சபைக்கு அறிவித்தார்.

Image

பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 40 உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையை சபாநாயகரிடம் நேற்று கையளித்தார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் திருத்தங்களுடன் மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் 21 ஆவது திருத்தத்தில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அதிக அவதானம் செலுத்தியுள்ளமை அதானிக்க முடிகிறது.

ஆகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21ஆவது திருத்த யோசனையை அவசர யோசனையாக கருதி விரைவாக நிறைவேற்றுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தினார்.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில்  ஐக்கிய மக்கள் சக்தியினர்  சபாநாயகரிடம் பிரேரணையை முன்வைத்துள்ளனர். 

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள யோசனைகள் சட்டமாதிபரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்தக்கட்ட தீர்மானம் சபைக்கு அறிவிக்கப்படும் என  சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 40 பேர் சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள திருத்த பிரேரணையில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட பல அம்சங்கள் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

20ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  பாராளுமன்ற பேரவைக்கு பதிலாக 19 ஆவது திருத்தததில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவை சபையை மீள் ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

21ஆவது திருத்தத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு,அரச சேவை ஆணைக்குழு,தேசிய பொலிஸ் ஆணைக்குழு,கணக்காய்வு ஆணைக்குழு,இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு,நிதி ஆணைக்குழு,எல்லை நிர்ணய ஆணைக்குழு,தேசிய பெறுகை ஆணைக்குழு உள்ளிட்ட 09 ஆணைக்குழுக்களின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில்  நீக்கப்பட்ட தேசிய பெறுகை ஆணைக்குழு,தேசிய கணக்காய்வு ஆணைக்குழு ஆகிய ஆணைக்குழுக்களை மீண்டும் ஸ்தாபிக்கும் யோசனை உள்ளடக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19