உளவு பார்த்த சீன புகைப்படப்பிடிப்பாளருக்கு சிறை

Published By: Digital Desk 5

22 Apr, 2022 | 12:56 PM
image

(ஏ.என்.ஐ)

கடந்த ஏப்ரல் 16 திகதி உத்தியோகப்பூர்வ தகவலின் பிரகாரம் , வெளிநாட்டு நபருக்கு உளவு பார்த்ததற்காகவும், சட்டவிரோதமாக அரச இரகசியங்களை வழங்கியதற்காகவும் சீன புகைப்படக் கலைஞருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சீன நாட்டு புகைப்படப்பிடிப்பாளர் 'வீஷெட்' செயலி மூலம்  வெளிநாட்டு நபரான 'சகோதரி குய்' என்பவருடன் நட்பு கொண்டுள்ளார். 

இராணுவ துறைமுகங்கள்  மற்றும் போர்க்கப்பல்கள் தொடர்பான 384 புகைப்படங்களை வழங்கியுள்ளார். 

இதற்காக 40,000 யுவானுக்கும் அதிகமான ஊதியம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'சகோதரி குய்'  என்ற வெளிநாட்டு தொடர்பின் அறிவுறுத்தலின் கீழ், 2019  ஜூலை மற்றும்  2020 மே வரையிலான காலப்பகுதியில் இராணுவ துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் திருமண புகைப்படங்களை எடுப்பதை போன்று அப்பகுதியில் புகைப்படங்பளை எடுத்துள்ளார்.

இராணுவத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள விரிகுடாவின் பரந்த-கோணக் காட்சிகளையே இதன் போது எடுத்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்களில் இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் பல இருந்துள்ளன. இவற்றை வெளிநாட்டு நட்பிற்கு அனுப்பி வைத்துள்ளார். 

இதனடிப்படையில் குறித்த நபருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 5 ஆண்டுகள் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33