யாழில் ரயிலுடன் வாகனம் மோதி விபத்து : ஒருவர் பலி, இருவர் படுகாயம்

Published By: Digital Desk 3

22 Apr, 2022 | 01:20 PM
image

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் - பட்டா ரக வாகன விபத்தில்  சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன் (வயது 12) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் (வயது 45) மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் (வயது 15) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றுவெள்ளிக்கிழமை பயணித்த புகையிரதத்துடன் , கொடிகாமம் மிருசுவில் வைத்திய சாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையில் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது. 

அதில் பட்டா ரக வாகனத்தில் பயணித்த சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தையும் , சகோதரனும் படுகாயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இதேவேளை, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை வந்துகொண்டிருந்த குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் அலவ்வா பகுதியில் கூலர் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தில் கூலர் ரக வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் அலவ்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08