தீபாவளி முற்பணம் கோரி போராட்டம்...!

Published By: Robert

21 Oct, 2016 | 03:19 PM
image

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீபாவளி முற்பணத்தை தோட்ட அதிகாரி வழங்க மறுத்ததையடுத்து லிந்துலை டிலிகுற்றி தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இன்று மதியம் 2 மணித்தியாலயங்கள் குறித்த தோட்டத்தில் சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஏனைய பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் தீபாவளி முற்பணம் வழங்கியிருக்கின்ற போதிலும் இத்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இன்று காலை தோட்ட தொழிற்சங்க தலைவர்களும் மற்றும் தொழிலாளர்கள் தோட்ட காரியாலயத்திற்கு சென்று தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரிய போது தோட்ட அதிகாரியால் வழங்க வேண்டிய தீபாவளி முற்பணம் கம்பனி வங்கியில் வைப்பு செய்யவில்லை எனவும், வைப்பு செய்தால் பணத்தை 24ம் திகதி தருவதாக கூறியதையடுத்து, தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களே இருப்பதால் 24ம் திகதி இப்பணத்தை பெற்று தங்களின் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு தீபாவளி பண்டிகைக்காக மாதாந்தம் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்து சேமித்து வைத்திருக்கும் தொகையினை கூட வழங்க தோட்ட நிர்வாகம் மறுத்துள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

கூட்டு ஒப்பந்தத்தில் 1000 ரூபாய் சம்பளம் பெற்று தருவதாக கூறிய மலையக அரசியல் தலைவர்கள் தம்மை ஏமாற்றியதாகவும், கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுப்படும் தொழிற்சங்க அதிகாரிகள் காட்டி கொடுத்துவிட்டனர்.

நேற்றைய தினம் தீபாவளி முற்பணம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக தெரிவிக்கின்றனர்.

எனவே தோட்ட நிர்வாகமும், தொழிற்சங்க அதிகாரிகளும் தமக்கு தீபாவளி முற்பணத்தினையும், ஏனைய கொடுப்பனவுகளையும் உடனடியாக பெற்று தருமாறும், அவ்வாறு தவறும் பட்சத்தில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட போவதாக இங்குள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06