பேராயருடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் வத்திக்கானுக்கு புறப்பட்டனர்

Published By: Digital Desk 3

22 Apr, 2022 | 02:35 PM
image

(எம்.மனோசித்ரா)

மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கிய 61 பேர் கொண்ட குழுவினர் புனித பாப்பரசரின் அழைப்பின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை காலை வத்திக்கான் பயணமாகியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கான் சென்று புனித பாப்பரசரை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையிலும் நீதி நிலைநாட்டப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரையும் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று மூன்றாண்டு நிறைவு அனுஷ்டிக்கப்பட்டது. மூன்றாண்டு நிறைவு நிறைவடைந்த மறுதினம் பேராயர் தலைமையிலான குழு இவ்வாறு வத்திக்கான் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயம் தொடர்பில் கொழும்பு பேராயர் இல்ல தொடர்பாடற் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் நாம் செல்லும் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவமுடையதாகும். புனித பாப்பரசர் பாதிக்கப்பட்ட மக்களுடன் ரோமுக்கு வருமாறு பேராயருக்கு விடுத்த அழைப்பின் பேரிலேயே நாம் இவ்விஜயத்தினை மேற்கொண்டுள்ளோம். 

தாக்குதல்கள் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் , பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்தோம். எனினும் நாம் எதிர்பார்த்தளவில் எந்தவொரு நியாயமும் வழங்கப்படவில்லை.

காலம் செல்லும் போது எமது இந்த போராட்டம் கைவிடப்படும் என்று எமது தலைவர்கள் எண்ணியிருக்கக் கூடும். ஆனால் ஒருபோதும் அவ்வாறு இடம்பெறாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்கும் வரை நாம் எமது போராட்டங்களையும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளையும் கைவிடப் போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26