பிரதமர் பதவி விலகி மகாசங்கத்தினர் ஏற்றுக் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளிக்க வேண்டும் - உதய கம்மன்பில

Published By: Digital Desk 3

22 Apr, 2022 | 09:54 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்கள் ஒன்றிணைந்து தீர்வு கோரி வீதிக்கிறங்கியுள்ள நிலையில் பாராளுமன்றம் ஒன்றுப்படாமல் இருப்பது வெட்கப்பட வேண்டியதொரு நிலையாகும்.

பிரதமர் ஓய்வு பெறும்  காலம் தோற்றம் பெற்றுள்ளதால் அவர் பதவி விலகி மகாசங்கத்தினர் ஏற்றுக் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளிக்க வேண்டும் என உதய கம்மன்பில சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றில்  நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள மக்கள் தீர்வு கோரி வீதிக்கிறங்கிய போது  டி56 துப்பாக்கி தோட்டாக்கள் தீர்வு என்பதாயின் அது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் தற்போதைய நெருக்கடியில் அரசாங்கம் தொடர்ந்து பொறுமை காக்க வேண்டும். 

அரசாங்கம் உரிய தீர்மானத்தை முன்னெடுக்காததன் விளைவை தற்போது எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளது.

அரசாங்கத்தில் அமைச்சு பதவியை வகித்த போது இலங்கை வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது. 

வலுசக்தி நெருக்கடி பொருளாதார, அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என அமைச்சரவையில் 11 முறை எடுத்துரைத்தேன்.

எமது கருத்துக்கு அமைச்சரவையில் இடமளிக்கவில்லை. முன்னாள் நிதியமைச்சர் அநாகரீகமான முறையில் வார்த்தை பிரயோகத்தை வெளிப்படுத்தினார். நிதியமைச்சரை அமைதிப்படுத்த ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையாகவில்லை.

அன்று அமைச்சரவையின் பொறுப்பினை முறையாக செயற்படுத்தாதன் விளைவாகவே இன்று பின்வரிசையில் அமர்ந்துள்ளார்கள். ஜனாதிபதியின் அனைத்து தீர்மானங்களுக்கும் ஆம் சேர் எனக் குறிப்பிட்டால் அது முறையற்றதாக அமையும்.

அரசாங்கத்தின் அழிவு இரசாயன உரம் தடையுடன்ஆரம்பமானது. தடை தொடர்பான யோசனை குறித்து பல மணிநேரம் கலந்துரையாடப்பட்டது.இரசாயன உரம்தடை யோசனைக்கு ரமேஷ் பதிரன,பந்துல குணவர்தன, கெஹேலிய ரம்புக்வெல, வாசுதேவ நாணயக்கார உட்பட நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

சேதன பசளை திட்டத்தை செயற்படுத்தினால் உலக வரலாற்றில் இடம் பிடிப்பீர்கள் என ஒரு சில அமைச்சர்கள் ஜனாதிபதி பெருமைபாடினார்கள்.

இரசாயன உரம் தடையை நீக்கிக்கொள்ளுமாறு அமைச்சரவையில் அறிவுறுத்திய போது விவசாய மகன் என குறிப்பிட்டுக கொள்ளும் அமைச்சர் ஜனாதிபதியை நோக்கி " ஜனாதிபதி அவர்களே இரசாயன உர கொள்கை மீள்செயற்படுத்தினால் அது உங்களின் புகழுக்கு பாதிப்பு ஏற்படும் ஆகவே இரசாயன உரம் வழங்க கூடாது என்றார்.

கொழும்பு அமைச்சர்கள் இரசாயன உரத்தை கோரினார்கள்,கிராமத்து அமைச்சர் சேதனப் பசளையை கோரினார்.அந்த அமைச்சரின்  பெயரை நான் சபையில் குறிப்பிட்டால் மக்கள் அவரது வீட்டை முழுமையாக சுற்றிவளைப்பார்கள்.

அமைச்சரவையில் அமைதியாக இருக்க வேண்டாம்.அமைதியாக இருந்தால் மக்களின் போராட்டம் ஒருபோதும் குறைவடையாது. பொறுமையிழந்த மக்கள் அரச தலைவர்கள் மீது நம்பிக்கை கொள்ளாது அரச அதிகாரத்தை கையிலெடுத்துள்ளார்கள்.

இடைக்கால அரசாங்கத்தை மகாசங்கத்தினர் உட்பட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். மக்கள் ஒன்றிணைந்து பிரச்சனைக்கு தீர்வு கோரி வீதிக்கிறங்கியுள்ளார்கள். பாராளுமன்றில் இன்றும் ஒரு தீர்வு காணாமல் இருப்பது வெட்கமடைய வேண்டும்.

மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் பதவி் விலக வேண்டும்.பிரதமர் பதவி விலகி ஓய்வுப் பெறுவதற்கான காலம் தோற்றம் பெற்றுள்ளது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38