இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் 17 வீரர்கள் இன்று கைச்சாத்திட்டுள்ளனர்.

நீண்ட காலமாக இழுபறி நிலையாக காணப்பட்ட குறித்த ஒப்பந்தம் இன்று முரண்பாடுகளுக்கு மத்தியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் காணப்பட்ட இரண்டு விதிமுறைகளுக்கு மூத்த வீரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையால், குறித்த ஒப்பந்தத்தில் இழுபறி நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஒப்பந்தத்தில் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ், ரங்கன ஹேரத், தினேஸ் சந்திமால், திமுத் கருணாரத்ன, குஷல் ஜனித் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு திரிமான்ன, தில்ருவன் பெரேரா, குசல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, நுவன் பிரதீப், கௌசால் சில்வா, தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த சமீர, தனுஷ்க குணதிலக, ஜெப்ரி வெந்தர்சே, லக்‌ஷான் சந்தகன் உள்ளிட்ட வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.