மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

21 Apr, 2022 | 03:24 PM
image

மலேரியா காய்ச்சலின் அறிகுறி தென்படும் நபர்கள், மலேரியா பாதிப்பு உள்ள நாடுகளுக்கு பயணம் செய்திருந்தால் அதை மருத்துவர் ஆலோசகர், தேசிய வைத்தியசாலை மற்றும் மருத்துவப் பயிற்சியாளரிடம் தெரிவிக்கத் தயங்கக் கூடாது என கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்தியர்   டி.ஆர்.உபுல் திசாநாயக்க தெரிவித்தார்.

தற்போது வைத்தியசாலைகளில் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவு பதிவு செய்யப்பட்டு வருகின்றது. 

மேற்கு ஆப்பிரிக்காவிற்கு விஜயம் செய்த நபர்களே மலேரியா நோயினால் பாதிப்புக்குள்ளானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

 டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் மலேரியாவின் அறிகுறி தோன்றினால்  நோயாளி வெளிநாட்டிற்குச் சென்றதை மருத்துவரிடம்  தெரிவிக்க வேண்டும். 

அதனை தொடர்ந்து  நோயினால் பாதிக்கப்பட்ட நபரிடம்  மலேரியா தொற்றுக்குள்ளான நாட்டிற்கு பயணம் செய்தாரா என்று மருத்துவர்கள் கேட்க வேண்டும் எனவும்  அவர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து பொது சுகாதார துணை இயக்குனர் வைத்தியர். எம் அர்னால்ட் கூறுகையில்,  இலங்கையில் மலேரியா ஒட்டுண்ணியை ஒழித்த போதிலும், மலேரியா நுளம்பு இன்னும் காணப்படுகின்றது என்றார்.

இது தொடர்பில்  மலேரியா எதிர்ப்பு பிரசாரத்தின் இயக்குனர் பிரசாத் ரணவீர கூறுகையில், 2021  ஆண்டு முதல் இதுவரை 26  மலேரியா நோயாளர்கள்  பதிவாகியுள்ளனர். 

இந்த ஆண்டின் ஏப்ரல் இரண்டாவது வார இறுதியில் 16  நோயாளர்கள்  பதிவாகியுள்ளனர். நாட்டில் அனோபிலிஸ் மலேரியா நுளம்புகள்  இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது அவை விரைவாக நோயை பரப்புப்புவதற்கு உதவுகின்றன என அவர் எச்சரித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22