உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் 3 ஆவது ஆண்டு ! நீதிக்காக அழுது புலம்பும் உறவுகள் !

21 Apr, 2022 | 12:51 PM
image

உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறுதினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த தருணம் இலங்கையிலும் கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடுவதற்காக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதேபோன்றதொரு 21 ஆம் திகதியில் ஆலயங்களில் திருப்பலியில் பங்கேற்றனர்.

அன்றையதினம் காலை 8.45 மணியளவில் எவருமே எதிர்பார்த்திராத சம்பவம் இலங்கையில் நடந்தேறியது. அன்றையதினம் இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகிற்குமே கறுப்பு நாளாக அமைந்தது.

அமைதி தேடி ஆலயங்களுக்குச் சென்றவர்கள் ஆலயத்திலிருந்து அழுகுரல்களுடன் ஓடினர், எங்கும் இரத்த வெள்ளம், மனித உடற்பாகங்கள் சிதறிக் கிடந்தன.

Image

Image

இலங்­கையில் மதத்தின் பெயரைப் பயன்­ப­டுத்தி ஒரு குழு கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மீதும் இலங்­கையின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் மேற்­கொண்ட மிலேச்­சத்­த­ன­மான தற்­கொலைத் தாக்­கு­தல்­களில் 45 வெளிநாட்டவர்கள் உட்பட 269 உயிர்கள் பலி­யெ­டுக்­கப்­பட்­ட­துடன் பலர் காய­ம­டைந்த நிலையில் தற்­போதும் அவர்களில் சிலர் ஊனமடைந்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

Image

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதிகோரி கடந்த 3 வருடங்களாக பல்வேறு தரப்பினரும் குரல்கொடுத்து வரும் நிலையில் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

Sri Lanka Catholics mark 'Black Sunday' for Easter victims- The New Indian  Express

நீதிக்கான போராட்டங்களும் கடந்த 3 ஆண்டுகளாக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டன. தற்போதும் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறும் மக்கள் எழுச்சிப்போராட்டத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

Image

Catholic priests and nuns stage a silent protest outside the Sri Lanka's Supreme Court complex in Colombo

இன்று உயிர்த்த ஞாயிறுதின தற்கொலைத் தாக்குதலின் 3 ஆண்டு நினைவு கூரல் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று (21) இடம்பெற்றது.

Image

இதில் “ உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு அப்பால் பாரதூரமான அரசியல் சதி இருப்பதாக சந்தேகிக்கின்றோம். அதன் காரணமாகவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் அரசாங்கமும் சட்டமா அதிபர் திணைக்களமும் பின்வாங்குகின்றன” என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆணித்தரமாக தெரிவித்தார்.

எவ்வாறு இருப்பினும் உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதலுக்கு நீதி வழங்குவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நீதியை பெற்றுக்கொடுப்பதில் பின்வாங்குகின்றதை நோக்கும் போது பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் இன்றைய கருத்துடன் உடன்பாடு உள்ளதாகவே தோன்றுகின்றது.

எத்தனை காலங்கள் கடந்தாலும் நீதியே வெல்லும் !

Image

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19