சிரித்துக்கொண்டே கொலை செய்கிறார் ஜனாதிபதி - அனுர குமார திஸாநாயக்க

Published By: Digital Desk 3

21 Apr, 2022 | 08:57 AM
image

(எம்.ஆர்.எம். வசீம் ,இராஜதுரை ஹஷான்)  

பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைக்கு தீர்வு காணும் திறன் ஜனாதிபதிக்கு கிடையாது. நடைமுறை பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் வெளிப்படையாகவே தோல்வியடைந்துள்ளது. சிரித்துக்கொண்டே கொலை செய்ய மட்டுமே ஜனாதிபதிக்கு தெரியும்.

அரசாங்கம் தனது உண்மையான பழக்கத்தை மீண்டும் ஆரம்பித்து விட்டது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது றம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு மோசமான நெருக்கடியினை தற்போது எதிர்க்கொண்டுள்ளது. மக்களின் போராட்டம்  துப்பாக்கிச் சூடு பிரயோகத்தை மேற்கொள்ளும் அளவிற்கு நிலைமை பாரதூரமான நிலைக்கு சென்றுள்ளது.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வி என்பதை பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டு மக்கள் திட்டமிட்ட வகையில் போராட்டத்தில் ஈடுப்படவில்லை. பொருளாதார பாதிப்பை  தாங்கிக்கொள்ள முடியாத மக்கள் வாழ்க்கை செலவு அதிகரித்த நிலையில் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து வயிற்றுப் பசிக்காக வீதிக்கிறங்கியுள்ளார்கள்.

அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு அரசியல் நெருக்கடியை  தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.மக்களின் போராட்டத்தை அரசாங்கம் அரசியல் போராட்டம் என குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் அரசியல் போராட்டத்தை அரசாங்கமே தோற்றுவித்துள்ளது.அரசாங்கத்தை தோற்றுவித்த மக்களே அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்கியுள்ளார்கள்.

மக்களின் வயிற்று பசிக்கு அரசியல் கட்சி பேதம் தெரியாது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் ஆற்றாமை போராட்டமாக வெளிப்படுகிறது. அரசாங்கம் பழமைய பழக்கத்தை தற்போது கையிலெடுத்துள்ளது. ரதுபஸ்ஷ சம்பவம், கட்டுநாயக்க  சுதந்திர வர்ததக வலயம் படுகொலை, சிலாபம் மீனவர் படுகொலை உள்ளிட்ட பல வரலாற்று பின்னணியை அரசாங்கம் கொண்டுள்ளது.

பொருளாதார பிரச்சினைக்கும்,சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் திறன் ஜனாதிபதிக்கு கிடையாது.

சிரித்துக்கொண்டே படுகொலை செய்வது மாத்திரம் ஜனாதிபதிக்கு தெரியும். மக்கள் மீது துப்பாக்கி முனையை திருப்புவதை தயவு செய்த நிறுத்துங்கள். பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் மக்களை நோக்கி திருப்பும் துப்பாக்கி பிறிதொரு காலம் அவர்கள் பக்கமே திரும்பும் நிலைமை தோற்றம் பெறும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31