நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது ; விநியோக கட்டமைப்பில் தான் பாதிப்பு - காஞ்சன விஜயசேகர

21 Apr, 2022 | 09:08 AM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)  

நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோக கட்டமைப்பில்  பாதிப்பு ஏற்பட்டு மக்களின் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டால் அதன் பொறுப்பை    எதிர்க்கட்சியினர்  முழுமையாக ஏற்க வேண்டும். 

நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது. எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் சபையில் நேற்று விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் கவலையடைவதுடன்,சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில்  பல்வேறு மாறுப்பட்ட பல விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன. உண்மை காரணிகள் திட்டமிட்ட வகையில் மறைக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

முத்துராஜவெல எண்ணெய்  களஞ்சியசாலையில் இருந்து  நேற்று முன்தினம்  (செவ்வாய்கிழமை) காலை 08.20 மணியளவில் எரிபொருள் நிரப்பட்ட  பவுசர் ரம்புக்கனை உட்பட மூன்று பகுதிகளுக்கு சென்றுள்ளது.

குறித்த பவுசர் காலை 11.20 மணியளவில் றம்புக்கனை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அடைந்ததை தொடர்ந்தே பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது.

ஆகவே கடந்த திங்கட்கிழமை பவுசர் புறப்பட்டு அது ஒரு நாள் முழுவதும் பிறிதொரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடும் செய்தி அடிப்படையற்றதாகும்.

ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுப்படும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. அத்தியாவசிய சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் போராட்டத்தில் ஈடுப்பட இடமளிக்க முடியாது. 3 முனையங்களில் இருந்து 537 பௌசர்கள் ஊடாக நாடு தழுவிய ரீதியில்  எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.

தற்போதைய அமைதியற்ற சூழ்நிலையினால் தற்போது நாடு தழுவிய மட்டத்தில் 46 பௌசர்களின் ஊடாக மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.

வைத்தியசாலை மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரம்புக்கனை போராட்ட்ம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சுயாதீனமான முறையில்  விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது. 10 நாட்களுக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது. எரிபொருள் விநியோக கட்டமைப்பில் மாத்திரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமைதியற்ற சூழ்நிலையினால்  சாரதிகள் சேவைக்கு சமூகமளிப்பதில் அச்சம் கொண்டுள்ளார்கள்.

நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சாரத்துறை சேவை கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டு முழு அத்தியாவசிய சேவையும் பாதிக்கப்பட்டால் அதற்கு எதிர்க்கட்சியினர் மாத்திரம் பொறுப்புக் கூற வேண்டும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை சீர் செய்ய அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58