அரசியல் நெருக்கடி குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துங்கள் : கட்சித் தலைவர் கூட்டத்தில் ரணில் வலியுறுத்தல்

Published By: Digital Desk 4

20 Apr, 2022 | 11:04 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பான நிலைப்பாட்டை உடனடியாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Articles Tagged Under: Ranil Wickremesinghe | Virakesari.lk

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய புதன்கிழமை (20) இடம்பெற்ற விசேட கட்சி தலைவர் கூட்டத்தில், நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைக்கு துரிதமாக தீர்வினை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதன் போது கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க , 'ரம்புக்கனை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து நாட்டில் பதற்றமானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும்.' என்று குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் , 'ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துடன் செயற்படப்போவதில்லை என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

எனவே அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் அரசாங்கமும் அண்மையில் அரசாங்கத்திலிருந்து விலகியவர்களும் தமது நிலைப்பாட்டினை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கட்சி தலைவர்கள் ஒன்று கூடி நெருக்கடிகள் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எட்ட வேண்டும். நாட்டிலுள்ள நிலைமைகள் பாராளுமன்றத்தினால் கட்டுப்படுத்தப்பட்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58