ரம்புக்கன சம்பவம் பல விடயங்களை உணர்த்தியது : ஓடிய மக்கள் மீதே துப்பாக்கிச் சூடு - மைத்திரி விசனம்

Published By: Digital Desk 4

20 Apr, 2022 | 11:02 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

ரம்புக்கனை போராட்டத்தின் போது ஒடிய பொதுமக்கள் மீதே துப்பாக்கி சூடு பிரயோகிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக பொலிஸ் காவலில் இருந்த பலர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனது ஆட்சியில் பொது மக்கள் மீதும் குற்றவாளிகள் மீதும் துப்பாக்கி சூடு பிரயோகிக்கப்படவில்லை. ரம்புக்கனை சம்பவம் பல விடயங்களை உணர்த்தியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசனம் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியில் போட்டி - மைத்திரி | Virakesari.lk

பாராளுமன்றில் புதன்கிழமை (20) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு நான் பொறுப்பு என்று  குறிப்பிடுவதை முழுமையாக நிராகரிக்கிறேன். குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணை அறிக்கைகளில் நான் தொடர்புப்பட்டுள்ளேன் என எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. சாட்சியங்கள் இல்லாமல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது கவலைக்குரியது.

பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலைமையில் முழு நாடும் பாராளுமன்றின் செயற்பாட்டை கூர்ந்து அவதானிக்கிறது.

ரம்புக்கனை போராட்டத்தில் ஓடும் மக்கள் மீதே துப்பாக்கி சூடு பிரயோகிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.போராட்டத்தை கலைக்க தண்ணீர் புகைவீச்சு மேற்கொள்வது இயல்பானதொரு செயற்பாடாகும்.

எனது ஆட்சியில் காலத்தில் பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை.குற்றவாளிகள் மீதும் இவ்வாறு தாக்குதல் முன்னெடுக்கப்பில்லை.கடந்த 2 வருட காலத்தில் அரசாங்கத்தினதும்,பொலிஸாரின் செயற்பாடுகளினாலும் பலர் கொல்லப்பட்டுள்ளதை அனைவரும் அறிவார்கள்.சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

பொருளாதாரம் மற்றும் அரசியல் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண வேண்டும்.பாராளுமன்றில் உரிய நடவடிக்கை மேற்கொள்வது கட்சி தலைவர்களின் பொறுப்பாகும்.

ரம்புக்கனை சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன். மக்களின் போராட்டத்தை சிறந்த முறையில் கையாளும் பொறுப்பு அரசாங்கம் உண்டு.

எனது ஆட்சி காலத்தில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.போராட்ட இடங்களுக்கு செல்லும் போது துப்பாக்கி கொண்டு செல்ல வேண்டாம் என பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருந்தேன்.எதிர்வரும் நாட்களில் விவசாயிகளின் போராட்டமும் தலைதூக்கும்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01