ரம்புக்கனயில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமைக்கு அரசாங்கம் விளக்கம்

Published By: Digital Desk 5

20 Apr, 2022 | 10:43 PM
image

(எம்.ஆர்.எம். வசீம் ,இராஜதுரை ஹஷான்)  

ரம்புக்கனை  போராட்டத்தை அமைதியான முறையில் கட்டுப்படுத்த பொலிஸார் சகல நடவடிக்கைகளிலும் முயற்சித்த  பின்னரே துப்பாக்கி சூட்டை பிரயோகித்துள்ளனர்.

 எரிபொருள் பௌசருக்கு போராட்டகாரர்கள் தீ மூட்டியிருந்தால் அது பாரிய விளைவினை ஏற்படுத்தியிருக்கும்.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் .பொலிஸார் பொறுப்புடனும்,பொறுமையுடனும் செயற்பட்டுள்ளார்கள்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபையில் தெரிவித்தார்.  

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் சபையில் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரம்புக்கனை  சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி உட்பட அரசாங்கததின் சார்பில் தனிப்பட்ட முறையில் அனுதாபத்தையும்,கவலையை சபையில் தெரிவித்துக்கொள்கிறேன்.சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

ஆளும் தரப்பின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டதால் பாராளுமன்றில் வேலை பளுவாகவிருந்தேன்.

ரம்புக்கனை  சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உட்பட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளனர் . நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

போராட்டங்களுக்கு முழுமையாக இடமளித்துள்ளோம். போராட்டங்களில் ஈடுப்படாத மக்களின் அத்தியாவசி சேவைகளையும்,பொது பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

போராட்டங்களின் போது பொது மக்களின் பாதுகாப்பையும், சட்டவொழுங்கையும் பாதுகாக்க பொலிஸார் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. 

அத்துடன் பொது மக்களின் அன்றாட நடவவடிக்கைகளை இயல்பான முறையில் முன்னெடுத்து செல்வதற்கு பொலிஸார் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

நாட்டில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. போராட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி கடந்த நாட்களில் பலரை ஒன்றினைத்து போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளார்கள்.ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் போராட்டத்தின் பின்னணியில் உள்ளார்கள்.

ரம்புக்கனை  சம்பவத்தை கட்டுப்படுத்த பொலிஸார் ஆரம்பத்திலிருந்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

சுமார் 10 மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

போராட்டகாரர்கள் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்துள்ளார்கள். அத்தடன் 35 ஆயிரம் லீற்றர் எரிபொருள் பௌசருக்கு தீ வைக்க முற்படுகையில்  தான்  பொலிஸார் தங்களுக்கு வழங்கப்பட்டட அதிகாரத்திற்கமைய நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளார்கள்.

பொலிஸார் பொலிஸ் கட்டளைச்சட்டத்திற்கமைய ,56ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் செயற்பட்டுள்ளார்கள்.

போராட்டத்தை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்தே பொலிஸார் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளார்கள். 

இச்சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு அவிசாவெல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் தலைமையில் விசேட  குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன்,பொது மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மட்டத்திலும் விசேட குழ நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த குழுவின் அறிக்கையை விரைவில் சபைக்கு சமர்ப்பிப்போம். சுயாதீனமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம்.

 போராட்டகாரர்கள் எரிபொருள் பௌசருக்க தீ வைத்திருந்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கததிற்கு உண்டு.பொலிஸார் பொறுமையுடனும்,சட்டத்திற்கமையவும் செயற்படுகிறார்கள்.

பாராளுமன்றில் எதிர்ப்பு தெரிவிக்கும்  தரப்பினரது பிள்ளைகள் போராட்டத்தில் ஈடுப்படுவதில்லை.

சாதாரண பொது மக்களை வீதிக்கிறக்கி போராட்டங்களை தீவிரப்படுத்துகிறார்கள்.பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்  என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06