ரம்புக்கனை சம்பவ சி.சி.டி.வி. காணொளிகளை பகிரங்கப்படுத்துங்கள் - நாமல், விமல், ஹரீன் வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

21 Apr, 2022 | 08:46 AM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)  

ரம்புக்கனை சம்பவம் தொடர்பிலான சி.சி.டி.வி காணொளிகளை முழுமையாக ஊடகங்களில் பகிரங்கப்படுத்த உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தமாறு  நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் ஹரீன் பெர்னான்டோ ஆகியோர் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்கள்.

பாராளுமன்றில் புதன்கிழமை (20) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது ரம்புக்கனை சம்பவம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுப்படும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ரம்புக்களை சம்பவம் கண்டிக்கதாக காணப்படுகிறது.

சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு காணொளிகள் வெளியாகியுள்ளன.

வாகனங்களுக்கு பொலிஸார் தீ வைத்ததாக ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள், பிறிதொரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தீ வைத்தார்கள் என்று  குறிப்பிடுகிறார்கள்.

குறித்த சம்பவத்தின்  பொறுப்பினை ஆளும் தரப்பினரும் எதிர்தரப்பினரும் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்வதால் எவ்வித பயனும் கிடைக்கப்பெறாது.அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படுவது அவசியமாகும்.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பிலான  அனைத்து சி.சி.டி.வி காணொளிகளை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதை உரிய தரப்பினருக்கு அறிவுறுத்துங்கள்.

போராட்டத்தில் ஈடுப்படும் மக்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு  ஏற்படாத வகையில் போராட்டத்தில் ஈடுப்படுவது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

காலை 08.20 மணிக்கு எரிபொருள் பௌசர் புறப்பட்டதாக  பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டார் அவ்வாறாயின் சி.சி.டி.வி காணொளிகளை ஊடகங்களில் பகிரங்கப்படுத்த முடியுமா என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச  மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவிடம் கேள்வியெழுப்பினார்.

குறித்த சி.சி.சி.டி காணொளிகளை பகிரங்கப்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சபையில் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08