(ரி.விரூஷன்)

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட 21 உத்தியோகத்தர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 மற்றும்  22 ஆம் திகதிகளில் இச் சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது யாழ்.போதானா வைத்தியசாலையில் அன்று கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் நினைவாக இன்றைய தினம் யாழ்.போதானா வைத்தியசாலையில் நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் யாழ்.போதனா வைத்தியசாலை கதிரியக்க பகுதியில் நடைபெற்றது.கொல்லப்பட்ட 21 உத்தியோகத்தர்களின் 29வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகளில் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் செ.பவானந்தராஜா மங்கள விளக்கேற்றியதுடன் உயிரிழந்த உத்தியோத்தர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.பின்னர் கடமையின் போது சுட்டக்கொல்லப்பட்டு உயிரிழந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உத்தியோகத்தர்களின்  உறவினர்கள் சுடரேற்றியும் மலர்மாலை அணிவித்தும் மலர் தூவியும் தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள்.நிறைவில் யாழ் .போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் செ.பவானந்தராஜா அஞ்சலி உரையாற்றினார். இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலையின் மேலதிக பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் தாதியர்கள் உட்பட கொல்லப்பட்ட வைத்திய மற்றும் தாதியர்களின் உறவினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.