இலங்கை ராஜபக்ஷர்களின் நாடல்ல - அனுர பிரியதர்ஷன யாப்பா

Published By: Digital Desk 3

20 Apr, 2022 | 10:17 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை ராஜபக்ஷர்களின்  நாடல்ல ஒரு குடும்பத்திற்கு  நாட்டை பொறுப்பாக்கி விட்டு எம்மால் உறங்கிக்கொண்டிருக்க முடியாது.

நாட்டின் நிதியதிகாரத்தை தகுதியற்ற தரப்பினருக்கு ஒப்படைத்ததன் விளைவை அரசாங்கம் எதிர்க்கொண்டுள்ளதுடன், முழு நாடும் அதன் விளைவை எதிர்க்கொண்டுள்ளது என அரச நிதி தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் (கோபா )தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் புதன்கிழமை (20 ) இடம்பெற்ற  விசேட விவாதத்தின் போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாரட் கப்ரால் உட்பட நாணய  சபையின் உறுப்பினர்கள் கோபா குழுவிற்கு முன்னிலையாகியமை தொடர்பில் சபைக்கு  அறிவுறுத்தகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் தற்போதைய மோசமான  பொருளதாரம் மற்றும் சமூக  சூழ்நிலையை அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்க  வேண்டும். தகைமையற்ற தரப்பினர் நிதி விவகாரத்திற்கு நியமித்ததன் விளைவை அரசாங்கம் எதிர்க்கொண்டுள்ளதுடன், முழு நாடும்  எதிர்விளைவை அனுபவிக்கிறது.

நாட்டின் நிதி நெருக்கடி தொடர்பில் அரச நிதி தொடர்பிலான  பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட நாணய சபையின் உறுப்பினர்கள் முன்னிலையான போது பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டது.

டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பிலும்,இறுதி கட்டத்தில் ரூபாவை தளம்பல் நிலைக்கு நிலைப்படுத்தியமை தொடர்பில்  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் குழுவிற்கு குறிப்பிட்ட விடயங்கள் முரண்பட்டதாகவே அமைந்தது.

நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் மத்திய வங்கி முன்னெடுத்த தீர்மானங்களை நிதியமைச்சரும்,அமைச்சரவையும் அறிந்திருக்கவில்லை.மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியை நியமிக்கும் போது  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பல்வேறு தரப்பினரது ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டார்.

 தகுதியற்ற தரப்பினர்  நாட்டின் நிதி நிலைமையினை மத்திய வங்கியின் ஆளுநர்,ஜனாதிபதியின் செயலாளர் உட்பட ஒருசில அரச அதிகாரிகள் நிர்வகித்ததன் விளைவை முழு நாடும் தற்போது எதிர்க்கொள்கிறது.நாட்டின் நெருக்கடி நிலைமையினை கருத்திற்கொண்டு அரசாங்கம் தயவு  செய்து பதவி விலக வேண்டும்.

புதிய அமைச்சரவை ஊடாக தீர்வு காண முடியும் என்று குறிப்பிட்டார்கள். தற்போது கண்டுள்ளார்களா இல்லையே ஆகவே அரசாங்கம் யதார்த்த நிலைமையை அறிந்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து அரசியலமைப்பு திருத்தம் செய்து நடைமுறை பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காண முடியும்.

இது ராஜபக்ஷர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல ஒரு குடும்பத்திற்கு முழு நாட்டையும் பொறுப்பாக்கி விட்டு எம்மால் உறங்கிக்கொண்டிக்க முடியாது. தகுதியானவர்களிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்து விட்டு தயவு செய்து வெளியேறுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38