பாராளுமன்றத்தில் சூடுபிடித்த ரம்புக்கனை துப்பாக்கி சூடு - சபை நடவடிக்கைகள் 10 நிமிடம் ஒத்திவைப்பு

Published By: Digital Desk 3

20 Apr, 2022 | 03:21 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று (19)  இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (20) பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை  தெரிவித்துடன், சம்பவம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கூற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது என கோஷம் எழுப்பியது. இதனால் சபையை கட்டுப்படுத்த முடியாமல் சபை நடவடிக்கையை சபாநாயகர் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

பாராளுமன்றம் இன்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைதொடர்ந்து, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுந்து,  ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூடி, இதுதொடர்பாக கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றார். 

அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, கட்சி தலைவர்கள் கூடி கலந்துரையாடி, அதன் பின்னர் அதுதொடர்பில் சபையில் விவாதித்துக்கொண்டிருக்க தேவையில்லை. 

சம்பவம் தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விளக்கமளிக்க தயாராக இருக்கின்றார். அவருக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குங்கள். அதன் பின்னர் எமது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் என்றார்.

அமைச்சரின் கருத்துக்கு  எதிர்ப்பு

அதனைத்தொடர்ந்து சபாநாயகர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு தனது உரையை நிகழ்த்துமாறு தெரிவித்தார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனது உரையில், ரம்புக்கனை சம்பவத்தில் மக்கள் எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முற்பட்டதாகவும், அதனை தடுப்பதற்கே பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தவேண்டி ஏற்பட்டது எனவும் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணை இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சரின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து அவருக்கு எதிராக எதிர்ப்பு கோஷங்களை ஏழுப்பியதுடன் இரத்தவெறி வேண்டாம் என பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். 

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அனைவரும் இரத்தம் வேண்டாம் என்ற வாசகத்துடன் நிறுத்தல் அடையாளம் அடங்கிய ஸ்டிகர் ஒன்றையும் ஒட்டிக்கொண்டு சபைக்குள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கோஷங்களுக்கு மத்தியில் பேச்சை தொடர்ந்த அமைச்சர்

பிரதான எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பிக்கொண்டிருந்த நிலையில்   அமைச்சர் பிரசன்ன தனது உரையை தொடர்ந்தார். இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்களும்  அமைச்சருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். 

சபை நடவடிக்கை ஒத்திவைப்பு 

இதன்போது சபையை கட்டுப்படுத்த சபாநாயகர் பலதடவைககள் முற்சித்தபோதும் முடியாத நிலையில் காலை 10.10 மணியளவில் 10 நிமிடங்களுக்கு சபையை ஒத்திவைத்தார். பின்னர் 10.25 மணிக்கு களேபரம் மணி ஒலிக்கச்செய்து சபை நடவடிக்கைகள்  10.30 மணிக்கு மீண்டும் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44