பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியை மறித்து மீனவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பதற்றம் இடம்பெற்றுள்ள பகுதிக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.