உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் 3 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட ஆராதனைகள்

Published By: Digital Desk 5

19 Apr, 2022 | 10:46 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அடிப்படைவாதிகளால் கத்தோலிக்க தேவாலயங்கள் , நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வியாழக்கிழமையுடன் 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ளமையை முன்னிட்டு , கொழும்பு பேராயர் இல்லத்தினால் விசேட ஆராதனைகள் மற்றும் நினைவுகூரல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் காலை 8.30 க்கு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளின் வருகையும் , 8.40 க்கு நிகழ்விற்கான அறிமுகமும் , 8.45 க்கு 2 நிமிட மௌன அஞ்சலியும் , 8.47 க்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி தேவாலய மணிகளை ஒலிக்கச் செய்தலும் , 8.50 க்கு சர்வமத வழிபாடுகளும் , அதன் பின்னர் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் மக்களுக்கான விசேட உரையும் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து முற்பகல் 9.45 க்கு இறை வழிபாடும் , 11 மணிக்கு ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Sri Lanka serial bombings: 215 killed in ghastly attacks; 3 Indians among  dead; 13 suspects arrested - Oneindia News

இந்த விசேட நிகழ்வுகள் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ள நிலையில் , இதில் இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக தூதரக ஆண்டகை , அருட்தந்தையர்கள் , அருட் சகோதரர்கள், கன்னியாஸ்திரிகள் , பௌத்த மத குருமார் உள்ளிட்ட ஏனைய மதத் தலைவர்கள் , உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களின் போது பாதிக்கப்பட்டோரது குடும்ப அங்கத்தவர்கள், தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அந்தந்த நாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும்.

புனித அந்தோணியார் திருத்தலத்தில் இந்த விசேட நிகழ்வுகள் நிறைவுபெற்றதன் பின்னர் குண்டு தாக்குதல்களுக்கு இலக்கான நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.

 அதற்கமைய பேராயர் தலைமையில் மாலை 3.30 முதல் 4 மணி வரை பிரார்த்தனைகளும் , கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் அமைதிப்பேரணி ,   5 மணியளவில் நீர்கொழும்பு பஸ்தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள புனித ஜோசப்பாஸ் திருச்சொரூபத்திற்கு அருகாமையில் நிறைவடையும். அதனையடுத்து அங்கு விசேட நினைவு கூரல் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47