அவிசாவளையில் பதற்றநிலை

Published By: Digital Desk 3

19 Apr, 2022 | 12:12 PM
image

(அவிசாவளை நிருபர்)

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும்  எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) காலை தொடக்கம் அவிசாவளை கொழும்பு பிரதான வீதி உக்குவத்தை சந்தியில் தனியார் பஸ் சாரதிகள்  பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இதனால்  அவிசாவளை -  கொழும்பு விதியில் போக்குவரத்து தடைப்பட்டதுடன் பொதுமக்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

அவிசாவளையில் இருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் சகல  தனியார் பஸ்களும் சேவையில் ஈடுப்படுத்தப்படாமல் தனியார் பஸ் சாரதிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டத்துடன் பிரதான பாதையை மறித்தும் அரசாங்கத்திற்கு எதிராக தமது எதிர்ப்புக்குரலை எழுப்பினர்.

அதேவேளை அவிசாவளை இரத்தினப்புரி பிரதான வீதியை அவிசாவளை தனியார் பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக தனியார் பஸ் ஒன்றை பாதையின் குறுக்கேயும் நகர முச்சக்கர வண்டி சாரதிகள்  தமது வாகனங்களை பாதை நடுவே தரித்து வைத்தும் போக்குவரத்தை தடைச்செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அத்துடன் பிரதான பாதையில் போக்குவரத்தில் ஈடுப்பட்டுள்ள அரச பஸ்களையும் சேவையில் ஈடுபடுப்படவிடாது தமது எதிர்ப்புக்களை தெரிவித்தனர். 

இதனால் தனியார் பஸ் சாரதிகளுக்கும் அரச பஸ் சாரதிகளும் வாய்த்தர்க்கத்தில் ஈடுப்பட்டு பதற்றநிலை உருவானது.

 

பிரதான வீதியின் ஊடாக பயணிக்கும் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பொதுமக்கள் பெரும் சிக்கல்களை சந்தித்தனர். அத்தோடு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்ததோடு கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40