ஹொரணை நகரை சுத்­தி­க­ரிப்பு செய்யும் பணியில் ஈடு­பட்டு வரும் ஹொரணை நகர சபையைச் சேர்ந்த 40 க்கும் மேற்­பட்ட தொழி­லாளர் குடும்­பங்கள் கடந்த 40 வரு­டங்­க­ளுக்கு மேலாக நிரந்­தர குடி­யி­ருப்பு, குடிநீர், மல­ச­ல­கூ­ட­வ­சதி மற்றும் பாதை வச­தி­யின்றி பெரும் சிர­மத்­துக்கு மத்­தி­யி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர்.

ஹொரணை – மத்­து­கம வீதியில் ஹொர ணை நக­ருக்கு அருகே அமைந்­துள்ள நகர சபைக்குச் சொந்­த­மான ரோஸ்வூட் என்ற காட்டுப் பிர­தேச காணி­யி­லேயே தற்­கா­லிக குடி­சைகள் அமைத்து வசித்து வரும் நிலை யில், இவர்­களின்  வாழ்க்கை நிலை குறித்து அர­சி­யல்­வா­தி­களும் அதி­கா­ரி­களும் இன்று வரையில் இவர்­க­ளுக்­கான நிரந்­தர குடி­யி­ருப்­புக்­களை அமைத்துக் கொடுக்கவும் ஏனைய அடிப்­படை வச­தி­க­ளை ஏற்­ப­டு த்திக் கொடுக்கவும் முன்­வ­ராமை குறித்து இந்த மக்­களும் பிர­தே­ச­வா­சி­களும் மிகுந்த அதி­ருப்­தியும் விச­னமும் தெரி­வித்­துள்­ளனர்.

குப்பைக் கூளங்கள், வீடு­களில் சேரும் கழி­வுகள் இவற்றை கொட்­டு­வ­தற்­கான இட­ வ­ச­தி­யின்­மை, கழி­வுநீர் மற்றும் மழை நீர் வழிந்­தோ­டக்­ கூ­டிய வடிகான் வச­தி­யின்­மை போன்ற காரணங்களால் கழி­வு­களும் கழி­வு­நீரும் ஆங்­காங்கு தேங்­கிய நிலையில் காணப்­ப­டு­வதால் ஈ, நுளம்பு என்­பன பெருகி நோய்கள் ஏற்­படும் ஆபத்து காணப்­ப­டு­கி­றது.

நக­ர­ச­பை­யினால் மின்­சார வச­தியும் மூன்று குடிநீர்க் குழாய்கள் மட்­டுமே இவர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. குளிப்­ப­தற்கும் குடிப்­ப­தற்கும் வீட்டுத் தேவை­க­ளுக்கும் இந்தக் குழாய் நீரையே பயன்­ப­டுத்தி வரு­கின்ற போதிலும் இது இங்கு வசித்து வரும் அனை­வ­ரி­னதும் தேவையைப் பூர்த்தி செய்து கொள்­வ­தற்குப் போது­மா­ன­தாக இல்லை.

அவ­ரவர் முயற்­சியில் சிலர் பலகை மற்றும் தக­ரத்­தி­னா­லான மல­சல கூடங்­களை அமைத்­துள்­ளனர். பாதை வச­தி­யில்­லாத கார­ணத்தால் தனியார் காணியின் ஊடா­கவே போக்­கு­வ­ரத்துச் செய்து வரு­கின்­றனர்.

சிறுவர் முதல் பெரியோர் வரை பலரும் பெரும் சிர­மத்­துக்கு மத்­தியில் அரு­க­ருகே ஒழுங்­கற்ற முறையில் தகரம், பலகை இவற்­றினால் அமைத்துக் கொண்­டுள்ள குடிசைகளிலேயே வசித்து வருகின்றனர்.

இத்தனை வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இவர்களின் இந்த அவல நிலைக் குத் தீர்வு கிட்டாத போது தற்போதைய நல்லாட்சியிலாவது ஒரு விடிவு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.