அகில இலங்கை கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழா

Published By: Digital Desk 4

18 Apr, 2022 | 05:20 PM
image

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த  அல்லது இல்லாதொழிக்க இரு வழிகளை கையாளுகின்றனர். ஒன்று தேவையைக் குறைத்தல் (DEMAND REDUCTION) மற்றயது வழங்கலைக் குறைத்தல் (SUPPLY REDUCTION) தேவை இல்லையேல் வழங்கல் ஒழிந்தே போகும்.

இதனைக் கருத்திற்கொண்டு போதைப்பொருட் பாவனையால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை இளைய தலை முறைக்கு வழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை சர்வதேச சிங்கசமாஜம் பிராந்தியம் – -­306A2 1993/94ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்து தொடர்ந்தும் இன்று வரை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சித் தொடரில் ஒன்றான அகில இலங்கை கட்டுரைப்போட்டி 28வது வருடமாக இந்த வருடமும் நடாத்தி, அப்போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கும் விழா கடந்த 20ஆம் திகதி வித்தியா மாவத்தை, கொழும்பு 07இல் உள்ள சிங்கசேவை மத்திய நிலையத்தில் சிறப்புற நடைபெற்றது.

‘‘போதைப்பொருட் பாவனையும் அதன் பாரிய பாதிப்புகளும்” என்ற தலைப்பில் மும்மொழிகளிலும் 15 – 19 வயதிற்கு இடைப்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற இப்போட்டியில் ஒவ்வொரு மொழியிலும், முதல் ஐந்து இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு  தலா ரூபா 12,000/=, ரூபா 10,000/=, ரூபா 7500/=, ரூபா 5000/=, ரூபா 2500/= எனப் பணப்பரிசில்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்தும் 28 வருடங்களாக இத்தொடர் நிகழ்ச்சிகளை முன்னின்று செயற்படுத்திவரும், பிராந்திய இணைப்பாளர் லயன் எஸ். இராமச்சந்திரன் ஏற்பாடு செய்த இப்பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக சிங்காதிபதி லயன் புத்திக ரத்நாயக PMJF, MAF கலந்து சிறப்பித்தார்.

அவருடன் Dr. சரத் சமரகே (WHO), திரு. ரவிகந்தையா (FISD), திரு. குமார் நடேசன், (தலைவர் எக்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ்), திரு. செந்தில்நாதன் பிரதம நிறைவேற்று அதிகாரி (எக்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ்), PCC லயன் துமிந்த முனசிங்க, MJF, கொழும்பு மிட்சசிற்றி றோட்டறி கழகத் தலைவி Rnt.PHF கிஷானி ஜயசிங்க, லயன் பிரமோட் விமலதுங்க (தலைவர் தெஹிவளை வடக்கு சிங்க சமாஜம்) லயன் துலித பியசேன (பொருளாளர்), ஓய்வு நிலை சுங்கப் பணிப்பாளர் தர்மசேன கஹந்தவ ஆகிய பிரமுகர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்றோர் விபரங்கள் பின்வருமாறு

சிங்கள மொழியில்

1. செல்வி. A.G. உதார நெத்மி கருணாரத்ன – புஸ்பதான மகளிர் கல்லூரி, கண்டி.

2. செல்வி. T.A.G. பியூமி சாமிக்கா குணவர்த்தன, வீர கெப்பிற்றிபொல, மத்திய கல்லூரி, அகுறம்பொட.

3. செல்வி. K.G.S. நிசன்சலா லக்சானி கொலம்பகே, வீர கெப்பிற்றிபொல, மத்திய கல்லூரி, அகுறம்பொட.

4. செல்வி. D.G.U.D. ஜயவீர மயூராபத மத்திய கல்லூரி, நாரம்மல.

5. செல்வன். சாமோட் துஷான் விதானகே, புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி.

தமிழ் மொழியில்

1. செல்வி. ஜஸ்டின் வயலட் தெரசிற்றா, புனித சேவியர் கல்லூரி, மன்னார்.

2. செல்வி. சிவராசா மரிய நிலானி ஹோலி பெமிலி கொன்வன்ட், யாழ்ப்பாணம்.

3. செல்வி. கபிஷா பரசுதன், புனித மேரி தமிழ் மஹா வித்தியாலயம், கொழும்பு - 4.

4. செல்வி. லக்சாயினி சிறிவரதன், கொக்குவில் இந்துக்கல்லூரி, கொக்குவில்

5. செல்வி. எம்.எச்.முகமுதா சகீரா மகா வித்தியாலயம், வத்தளை.

ஆங்கில மொழியில்

1. செல்வி. மொகமட் சீனத் சௌபானா, மீரா பெண்கள் கல்லூரி, காத்தான்குடி.

2. செல்வன். சிவகனேசன் அனந்திகன், ஹாட்லி கல்லூரி, பருத்தித்துறை.

3. செல்வி. ரதிஷா பரத்தினேஷ், வவுனியா தமிழ் மஹா வித்தியாலயம், வவுனியா.

4. செல்வி. E.R.G.R.E. ராஜபக் ஷ, நுகவெல மத்திய கல்லூரி, நுகவெல.

5. செல்வி. தேஜஸ்வி பாலமுருகன், ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, திருகோணமலை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08