3 மாதங்களில் 5 தடவைகள் எரிபொருள் விலைகளை அதிகரித்த ஐ.ஓ.சி. நிறுவனம்

Published By: Digital Desk 3

18 Apr, 2022 | 03:47 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐ.ஓ.சி. நிறுவனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மீண்டும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதற்கமைய பெற்றோல் விலை 35 ரூபாவினாலும் , டீசல் விலை 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் ஐ.ஓ.சி. நிறுவனம் ஐந்தாவது முறையாக இவ்வாறு எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஐ.ஓ.சி. நிறுவனம் பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 50 ரூபாவினாலும், டீசல் லீற்றரொன்றின் விலையை 75 ரூபாவினாலும் அதிகரித்திருந்தது. விலை அதிகரிப்பிற்கமைய ஒக்டேன் 95 ரக பெற்றோல் 283 ரூபாவிற்கும் , யூரோ 3 பெற்றோல் லீற்றரொன்றின் விலை 263 ரூபாவிற்கும், டீசல் 214 ரூபாவிற்கும், சுப்பர் டீசல் 249 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனையடுத்து மார்ச் 12 ஆம் திகதி முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும்  ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை 77 ரூபாவினாலும் , ஒக்டேன் 95 பெற்றோலின் விலை 76 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலையை 55 ரூபாவினாலும் , சுப்பர் டீசலின் விலையை 95 ரூபாவினாலும் அதிகரித்தது.

கடந்த கால விலை அதிகரிப்புக்களின் பின்னர் ஐ.ஓ.சி. நிறுவனம் ஒக்டேன் 92 பெற்றோலினை 338 ரூபாவிற்கும் , சிபெட்கோ நிறுவனம் 254 ரூபாவிற்கும் விற்பனை செய்தன. இதே போன்று ஒக்டேன் 95 பெற்றோலினை ஐ.ஓ.சி. நிறுவனம் 367 ரூபாவிற்கும் , சிபெட்கோ 283 ரூபாவிற்கும் விற்பனை செய்தன.

மேலும் ஒட்டோ டீசலை ஐ.ஓ.சி. நிறுவனம் 289 ரூபாவிற்கும் , சிபெட்கோ 276 ரூபாவிற்கும் , சுப்பர் டீசலை ஐ.ஓ.சி. நிறுவனம் 327 ரூபாவிற்கும் , சிபெட்கோ 254 ரூபாவிற்கும் விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32