பாலம் புனரமைக்கப்பட வேண்டும் - மக்கள் கோரிக்கை

Published By: Robert

22 Dec, 2015 | 03:07 PM
image

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரத்தின் ஊடாக ஹட்டன் செல்லும் பிரதான பாதையில் கல்மதுரை தோட்ட மார்க்கத்தில் உள்ள பாலம் வெடிப்புற்று காணப்படுவதுடன் இப்பாலத்தில் பொருத்தபட்டிருந்த பாதுகாப்பு கம்பிகள் பழுதடைந்த  நிலையில் காணப்படுவதால் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. இப்பாலத்தின் ஊடாக கனரக வாகனங்கள் அரச மற்றும் தனியார் பஸ் சேவை இடம்பெறுகின்றது.

இப்பாதை 2007 ஆம் ஆண்டு மத்திய மாகாண வீதி அதிகார சபையால் காபட் பாதையாக புணரமைக்கபட்டது. இதன் போது இப்பாலம் புனரமைக்கபடாமல் கைவிடப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இப்பாலத்தினை புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் மலையக அரசியல் வாதிகளிடம் தெரிவித்தபோதும் இதுவரை எவறும் நடவடிக்கை எடுக்கவில்லையென இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் இடம்பெறும் வாகன விபத்துகள் தொடர்பாக அக்கரபத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தசிரியிடம் வினவியபோது, இப்பாலத்தில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெறுகின்றது. இதனால் வாகனங்கள் சேதமடைவதுடன் வாகனங்களில் செல்லும் பயணிகளும் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இப்பாலத்தில் காணப்படும் குறைப்பாடுகளை மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள். இதுதொடர்பாக நாங்களும் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக இவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41