இளந்தலைமுறையினரின் பேரெழுச்சி ! அடுத்தகட்டம்?

Published By: Digital Desk 5

18 Apr, 2022 | 11:45 AM
image

ஆர். ராம்

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற கனவான் திட்டத்தால் நாட்டை சீர்திருத்திவிடுவார் என்ற பேரவாவவில் ‘யுகபுருசராக’ கருதிய கோட்டாபய உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தைமீண்டும் அதிகார அரியாசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தவர்கள் தான்இப்போது போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்.

இதுகால வரையில் பொழுதைக் கழிப்பதற்காக காலிமுகத்திடலில் அதிகமாக ஒன்று கூடும்இளந்தலைமுறையினர் இப்போது கிளர்ந்தெழுந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நாட்டின் பொருளாதாரம்அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்றநிலைமையால் அன்றாட வாழ்க்கையை நகர்த்தமுடியாது ஏற்பட்டுள்ள திண்டாட்டமான சூழல்தான் இந்த எழுச்சிக்கு அடிப்படைக் காரணமாகிறது.

இந்த நிலையில் இளந்தலைமுறையினரின் தொடர்போராட்டம் வாரமொன்றை நிறைவுசெய்த கடந்த வெள்ளிக்கிழமை அன்று நேரடியாக போராட்ட களத்திற்கு செல்லமுடிந்தது. அங்குள்ள செயற்பாடுகளை அவதானிக்க முடிந்தது.குறித்த தினம் போராட்டத்தின் ஏழாம் நாள்.

காலை 9.30 மணியளவில் சென்ற போது காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபயவினால்போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி அவரையே வீட்டுக்கு அனுப்பும் பகுதியாகமாற்றப்பட்டுள்ளது.

அதாவது ‘கோட்டாவை வீட்டுக்கு அனுப்பும் கிராமம்’ (கோட்டாக கோ கம) என்றபெயரில் பல்வேறு கூடாரங்கள் அமைக்கப்பட்டு இளையோர் பெரியோர் என்றுதிரளான கூட்டத்தால் நிறைந்திருந்தது.

போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டுள்ள தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கும்தளத்தில் கையில் பதாகைகளுடன் இளைஞர்களும்ரூபவ் யுவதிகளும் அமர்ந்திருக்கின்றார்கள்.

சொற்ப தூரத்தில்ரூபவ் சுமார் 80வரையிலான தற்காலிக குடில்கள் காணப்படுகின்றன.மறுபக்கத்தில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்கும் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

இன்னொருபுறத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கருகில் புத்தாக்கசிந்தனைகளை வெளிப்படுத்தும் பகுதி காணப்படுகின்றது. அதில் சிலர் சித்திரங்களைவரைந்த வண்ணமிருந்தனர்.

அதேநேரம்ரூபவ் இணைய சேவை தடையின்றி வழங்கப்படுவதற்காக கோபுரமொன்றும்அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. காலை உணவுக்கான ஏற்பாடுகளை பிறிதொருஇளையோர் குழுவினர் முன்னெடுத்த வண்ணமிருந்தனர்.

சட்ட உதவிகளை வழங்குவதற்கு பிரத்தியே கூடாரமும் அவசர மருத்துவ உதவிகளைவழங்குவதற்கு பிரத்தியேக கூடாரமும்,தொலைபேசி,போராட்போராட்டடமடிகணனிகளுக்கானமின்சாரத்தைப் பெறுவதற்கானதொரு கூடாரமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனைவிடவும்ரூபவ் போராட்டத்தில் குழுக்குழுவாக போராட்ட தளத்திற்குசெல்வதற்கான முறைமையொன்றும் காணப்பட்டதோடு அவர்கள் தாங்கிநிற்பதற்கான பதாகைகளில் பொறிக்கப்படும் வசனங்களை எழுதும் பணிக்கும்இளையோர் பிரத்தியேகமாக இருந்தனர்.

மேலும் இந்தப் பகுதியில் காணப்பட்ட குப்பைக்கூடைகளில் ஜனாதிபதி கோட்டா,பிரதமர் மஹிந்த மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள்பொறிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், அவற்றுக்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் அணியும் ‘குரக்கன் சால்வையும்’அணிக்கப்பட்டிருந்தது. அவ்விதமான சால்வை பல ஓவியங்களில் கேலி செய்யப்பட்டுவரையப்பட்டும் இருந்தது.

சொற்ப தூரம் நகர்ந்து ஜனாதிபதி செயலகத்தினை அண்மித்தபோது அதற்குமுன்னாள் ஒருகுழுவினர் “கோட்டா வீட்டுக்குப் போ” (கோ கோம் கோட்டா) என்றபதாகைகளுடன் குழுமியிருந்தனர். அப்பகுதியில் வழித்தடைகளுடன் பொலிஸார், விசேடஅதிரடிப்படையினர் என்று பாதுகாப்பு பலமாகக் காணப்பட்டது.

ஜனதிபதி செயலகத்தினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலியில் தராக்கி சிவராம்நிமலராஜான்ரூபவ் லசந்த விக்கிரமதுங்க பிரகீத் எக்னெலியகொட உள்ளிட்டவர்களின்புகைப்படங்கள் தாங்கிய பதாகை கட்டப்பட்டு நீதி கோரும் வசனங்களும்பொறிக்கப்பட்டுள்ளது.

இதனைவிடவும் அந்த வேலியில் ஜனாதிபதி கோட்டா பிரதமர் மஹிந்தஉள்ளிட்டவர்களின் உருவபொம்மைகளும் காட்சிப்படுத்தப்பட்டு வீடு செல்லுமாறுவலியுறுத்தும் வாக்கியங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

அத்துடன்ஜனாதிபதி செயலகத்திற்கு நேர் எதிராக துறைமுகநகரத்தின் எல்லையில்பிளாஸ்டிக் போத்தல்களால் பாரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டாவீட்டுக்குப் போ’ என்ற வாக்கியமும் முழித்துக்கொண்டிருந்தது.

இதற்கிடையில் காலை பத்து மணியளவில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்வீரர் தம்மிக்க பிரசாத் தனது ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினைகோட்டாவை வீட்டுக்கு அனுப்பும் கிராமத்தினுள் ஆரம்பித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதிகோரியும் தற்போதையஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்பதையும் மையப்படுத்தியதாகவே அவருடையபோராட்டம் காணப்பட்டது.

சிலமணி நேரத்திற்குப் பின்னர் அவருக்கு ஆதரவாக இலங்கை அணியின் முன்னாள்தலைவர் அர்ஜுண ரணதுங்க பிரசன்னமாகியிருந்தார். வேறு சில முதற்தரபோட்டிகளில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேநேரம் தென்னிலங்கை கலைஞர்கள்இலக்கியவாதிகள் துறைசார்ந்தநிபுணர்கள் என்று ‘நட்சத்திர’ அடையாளமுள்ளவர்களும் போராட்ட களத்திற்கு வருகைதந்து இளைஞர்களுக்கு உற்சாகம் அளித்ததோடு தமது எதிர்ப்புக்களையும்வெளிப்படுத்திச் சென்ற வண்ணமிருந்தனர்.

போராட்ட களத்தில் வடக்கு, கிழக்கினை மையப்படுத்திய இளையவர்களின் பிரசன்னம்காணப்படாதபோதும் தென்னிலங்கை, முஸ்லிம், சொற்ப அளவிலான மலையகஇளையோரின் பிரசன்னம் கணிசமாகவே உள்ளது.

அவதானிப்புக்களின்படிவெறுமனே சமூக ஊடகங்கள் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த 9ஆம் திகதி நாட்டின்பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்தவர்கள் காலிமுகத்திடலில் “கோட்டாவீட்டுக்குப் போ” என்ற கோசத்தின் கீழ் ஒன்றிணைந்தனர்.

 கோட்டா வீட்டுக்குப்போகும் வரையில் காலிமுகத்திடலை விட்டு அகலப்போவதில்லை என்றும்அறிவித்திருந்தார்கள்.

வந்தவர்களில் பலர் அன்றைய தினமே திரும்பியிருந்தாலும் குறிப்பிட்டகுழுவினர் தொடர்ச்சியாக போராட்ட களத்தில் தங்கிவிட்டார்கள்.

தற்காலிகஉறைவிடம்ரூபவ் உணவு உள்ளிட்ட வசதிகள் சீராக கிடைக்கவும் போராடும் இளையோரின்இலக்கு வலிமையடைய ஆரம்பித்துள்ளது.

அத்துடன் நாளுக்கு நாள் போராட்டத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையும் இன,மதரூபவ் மொழி பேதங்களின்றி கணிசமான அதிகரிப்பை காண்பிக்கவும் ‘ஜனநாயகமுறைமையில்’ சாதிக்கலாம் என்ற நம்பிக்கை போராட்டக்காரர்களுக்கு புத்துயிர்அளித்துள்ளது.

இந்தப் போராட்டங்களில்  பின்னணியில் இருப்பது யார்?திரைமறைவில் இருந்து இயக்குவது எந்த சக்தி என்ற கேள்விகள் பலரிடத்தில் உள்ளன.

குறிப்பாக அரசாங்கம் இந்த விடயத்தில் தலையைப் பிய்த்துக்கொண்டுள்ளது. அதன் அத்தனை புலனாய்வுக் கட்டமைப்பும் தோல்வியடைந்து விட்டன.

இந்த நிலையில்ரூபவ் ஆரம்பித்தில் ஜே.வி.பியின் இளையோர் மற்றும் பல்கலைக்கழகதரப்பினர் என்று முத்திரை குத்தப்பட்டது.

பின்னர் மறைந்த மங்களசமரவீரவினால் ஒருங்கிணைக்கப்பட்ட உண்மையான நாட்டுப்பற்றாளர்கள் என்றுமுத்திரை குத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்துரூபவ் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக சக்தியின் திரைமறைவுஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்ட தரப்பினர் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டது.ஆனால் தற்போது வரையில் அனைத்தும் வெறும் ஊகங்களாகவே நீடிக்கின்றது.

அதேநேரம்ரூபவ் சமூக ஊடகங்களால் ஒருங்கிணைந்தவர்கள் ஒரு கட்டமைப்புக்குள்வந்துவிட்டார்கள்.தொடராக போராட்டத்தை முன்னெடுப்பதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களைபிரதான தளத்தில் குழுகுழுவாக வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு மட்டும்உள்வாங்கப்படுகின்றார்கள்.

அனைவரையும் உள்வாங்கும் நோக்கத்துடனும் வேண்டாத விடயங்களை தவிர்க்கும்நோக்கத்துடனும் பதாகைகள் முதல் கோசங்கள் வரையில் அனைத்தையும் வடிமைப்பதற்கும்வெளிப்படுத்தவதற்கும் களத்திலேயே குழுவொன்று உருவாக்கப்பட்டுவழிநடத்துகின்றது.

மேலும்ரூபவ் போராட்டகாரர்களுக்கான உணவு உள்ளிட்ட இதர தேவைகளை நிறைவேற்றுவதற்கு

தனி நபர்களும், தனியார் நிறுவனங்களும் சில தொண்டு நிறுவனங்களும் தம்மைஅடையாளப்படுத்தாது தொடர்ச்சியான உதவிகளை வழங்கி வருகின்றன.

இதேநேரம் போராட்டக்காரர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகைகள்மற்றும் குடிசைகள் வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கு நிகரானவை என்பதால் சர்வதேச வல்லாதிக்க சக்தியின் பின்னணி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பபட்டிருந்தது.

எனினும் அவை இலங்கையில் உள்ள சாரணர்கள் மற்றும் வனங்களில் பொழுதுகளைகழிப்பவர்கள் பயன்படுத்துவதற்கு நிகரானவையாகத்தான் உள்ளன.நல்லிணக்க தளமா?

இந்த போராட்டதளத்தில் பௌத்த தேரர்கள் ஒன்று கூடுகின்றார்கள்.புத்தாண்டைவரவேற்கின்றார்கள். கிறிஸ்தவ அருட்தந்தையர்கள் ஒன்று கூடி நிற்கின்றர்கள்.

கால்கழுவும் சம்பிரதாயத்தினை முன்கெடுக்கின்றார்கள். முஸ்லிம் சகோதரர்கள்பங்கேற்று நோன்பைத் துறக்கின்றார்கள்.

இதனால்ரூபவ் இந்த போராட்டத்தளம் பல்லினங்களைக் கொண்டிருக்கும் இலங்கையில்முதற்தடவையாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான களமாக அல்லதுமையமாக மாறியிருக்கின்றது என்று பெருமெடுப்பில் சித்திரிக்கப்படுகின்றது.

ஆனால் அடிவயிற்றில் கைவைத்தமையால் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ளஎழுச்சியில் பங்கேற்பவர்கள் ஏழுதாசப்தங்கள் கடந்தும் இனங்களுக்கு இடையில்காணப்படும் பிரச்சினை தீர்க்கப்படாமை தான் தற்போதைய நிலைக்கு காரணம் என்பதைஇன்னமும் ஏற்றுக்கொண்டதாக இல்லை.

இதேவேளைரூபவ் காலிமுகத்திடலில் கூடியுள்ள இளையோருக்குரூபவ் இதேயிடத்தில் 1956இல்தனிச்சிங்களச்சட்டத்திற்கு எதிராக போராடிய தமிழினத்தின் ஜனநாயகத் தந்தைஎஸ்.ஜே.வி.செல்வநாயகம் உள்ளிட்ட தலைவர்கள் மீது எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநயக்கஅரசு எவ்விதமான வன்முறையை கட்டவிழ்த்து விட்டது என்பதை அறிந்திருக்கவாய்ப்புக்கள் இல்லை.

ஆகவேரூபவ் இனப்பிரச்சினை பற்றிய அடிப்படை புரிதலற்ற இடத்தில் நல்லிணக்கம்பற்றிய உரையாடல் பயனற்றது. அதேநேரம் இந்த போராட்ட தளத்தில் வடக்கு,கிழக்கு,மலையக இளையோரும் பங்கேற்க வேண்டுமென்ற நிலைப்பாடு தற்போதுதோற்றம் பெற்றிருக்கின்றது.

போராட்டத்தில் பங்கேற்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள்அந்தந்தப்பகுதி இளையோரே. ஆனால் போராட்டத்தில் பங்கேற்பதாக இருந்தால் ஆகக்குறைந்ததுகடந்த எழுபது ஆண்டுகளில் எவ்விதமான துன்பங்களுக்கெல்லாம் முகங்கொடுக்க நேர்ந்தது என்ற புரிதலையாவது ஏற்படுத்துவது அவசியமாகிறது.

அடுத்தகட்டம் அதேநேரம் இந்தியா,சீனா,சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றிடமிருந்துகடன்களைப் பெற்று அத்தியாவசிய பொருள் விநியோகம் மற்றும்எரிபொருள்மின்தடை ஆகியவற்றை சீர் செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கணக்குப் போடுகிறது அரசாங்கம்.

நிலைமைகள் சீராகிவிட்டால் இந்தப்போராட்டம் பிசுபிசுத்துவிடும் என்று கருதும்அரசாங்கம் அதுரை இதனை பொருட்டாக கொள்ளாது மௌனம் காக்கிறது. மேலும் தங்களைஜனநாயகவாதிகளாக காண்பிக்கவும்ரூபவ் இந்தப்போராட்டத்தினைப் பயன்படுத்த முடியும்என்றும் அரசாங்கம் கருதுகின்றது.

இவ்வாறான நிலையில் காலிமுகத்திடல் போராட்டம் தொடரப்போகின்றது என்பதுவெளிப்படை. அவ்வாறு தொடரும்போது போராட்டக்காரர்களின் கோரிக்கைஏற்றுக்கொள்ளப்பட்டு ‘கோட்டா வீட்டுக்குப்போனால்’ அவர்களின் அடுத்ததெரிவு என்ன? யார் நாட்டின் ஆட்சியாளர்கள்? இந்த வினாக்களுக்குபோராட்டகளத்தில் உள்ளவர்களிடத்திலிருந்து பதில்கள் கிடைக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13