சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட முப்படை தளபதிகளுடன் இணைந்து செயற்படுவது எமது கடமை - பாதுகாப்பு செயலாளர்

Published By: Digital Desk 3

18 Apr, 2022 | 09:57 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் மக்களின் பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்காக முப்படை தளபதிகளுடன் இணைந்து அரசியலமைப்பிற்கமைய செயற்படுவது எமது கடமையாகும். இலங்கையின் முப்படையினர் நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தார்மீக படையினராவர் என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் பொன்சேக்காவினால் அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரை விழித்து இடப்பட்டிருந்த பதிவிற்கு பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அமைதியான போராட்டக்காரர்களிடம் இராணுவத்தினரின் அதிகாரத்தை தவறான உபயோகிப்பதற்கான எவ்வித தயார்ப்படுத்தலும் முன்னெடுக்கப்படவில்லை. ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முடக்குவதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.

வன்முறையான சந்தர்ப்பங்களில் தேசத்தின் பாதுகாப்பிற்காகவும் , அரசியலமைப்பினைப் பாதுகாப்பதற்காகவும் , அனைத்து இலங்கையர் மத்தியிலும் அமைதியையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்காக பொலிஸாரால் கோரப்பட்டால் மாத்திரமே இராணுவத்தினரின் ஒத்துழைப்பு வழங்கப்படும்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மத்தியில் புலனாய்வுப்பிரிவினரை அனுப்பி அவர்களால் ஏதேனுமொரு வகையில் கலவரத்தினை ஏற்படுத்தல் அல்லது குண்டு தாக்குதலை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகள் ஊடாக போராட்டக்காரர்களை கலைப்பதற்கு முப்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகின்ற செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. இலங்கையின் முப்படையினர் நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தார்மீக படையாகும்.

அமைதியான போராட்டங்களின் போது தமது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு முற்படும் சில குழுவினருக்கு எதிராகவும் ,  அமைதியான போராட்டங்கள் என்ற போர்வையில் அரச சொத்துக்கள் அல்லது தனியார் சொத்துக்களை அழிப்பவர்கள் மற்றும் அதற்கு தலைமை தாங்குபவர்களுக்கு எதிராக பொலிஸ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகளுடன் இணைந்து அரசியலமைப்பிற்கமைய சட்டத்தையும், ஒழுங்கையும், மக்களின் பாதுகாப்பையும் நிலைநாட்ட வேண்டிய கடமை இருப்பதாகக் குறிப்பிட்டு, கௌரவத்துடனும் நேர்மையுடனும் செயற்படுவதற்கு முப்படையினரும் பொலிஸாரும் மேற்கொண்டுள்ள முயற்சிகளை சுட்டிக்காட்டியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26