சர்­வ­தேச நாணய நிதி­யம் டொலர் கடனை வழங்காவிடின் ஜூனுக்கு பின் இலங்கை நிலை என்ன ?

Published By: Digital Desk 5

18 Apr, 2022 | 10:14 AM
image

–ரொபட் அன்­டனி–  

வெளி­நாட்­டுக்­கடன் மீள்­செ­லுத்­து­கையைத் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­து­வ­தற்குத் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக  இலங்கை மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது. 

சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் மேற்­கொள்­ளப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­களை அடுத்து  மத்­திய வங்­கி­யினால் இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.  வெகு­வி­ரைவில் சர்­வ­தேச  கடன் மறு­சீ­ர­மைப்பை மேற்­கொள்­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ளது.

வெளி­நாட்­டுக்­க­டன்­களை மீளச்­செ­லுத்­து­வதை இடை­நி­றுத்­து­வதன் மூலம் எஞ்­சு­கின்ற நிதி  அத்­தி­யா­வ­சி­யப்­பொ­ருட்­களின் இறக்­கு­ம­திக்­காகப் பயன்­ப­டுத்­தப்­படும்  என்றும்  மத்­திய வங்கி மற்றும் நிதி­ய­மைச்சு என்­பன அறி­வித்­துள்­ளன. 

வெளி­நாட்டுப் பொதுக்­க­டன்­களை உரிய காலப்­ப­கு­தியில் மீளச்­செ­லுத்­த­மு­டி­யாத நிலை­யேற்­பட்­டுள்­ளது. இலங்­கையின் கடன் மீள்­செ­லுத்­துகை நிலை­வரம் நிறை­பே­றற்­ற­தாகக் காணப்­ப­டு­வ­தாகக் கடந்த மாத இறு­தியில் சர்­வ­தேச நாணய நிதியம் மதிப்­பீடு செய்­தி­ருந்­தது.   

செயற்­தி­றன்­மிக்க கடன் மறு­சீ­ர­மைப்பை மேற்­கொள்­ள­வேண்­டி­யது தற்­போது மிகவும் அவ­சி­ய­மா­ன­தாக மாறி­யி­ருக்­கின்­றது.  இந்த யதார்த்­தத்தைப் புரிந்­து­கொண்ட இலங்கை   பொரு­ளா­தார மீட்சி செயற்­றிட்­டத்தைத் தயா­ரிப்­ப­தற்­கான அனு­ச­ர­ணையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கும் கட­னு­தவி பெறு­வ­தற்கும் சர்­வ­தேச நாணய நிதி­யத்தை நாடி­யது.   

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணி­யி­லேயே நிலு­வை­யி­லுள்ள வெளி­நாட்­டுக்­க­டன்­களின் மீள்­செ­லுத்­து­கையைத் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­து­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் உத­வி­யுடன் கடன் மறு­சீ­ர­மைப்பு உள்­ளிட்ட பொரு­ளா­தா­ர­மீட்சி செயற்­றிட்­டத்தை தயா­ரிப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது  என்றும்  மத்­திய வங்­கியும் நிதி­ய­மைச்சும் அறி­வித்­துள்­ளன. 

அந்­த­வ­கையில் இலங்கை தற்­போது வெளி­நாட்டு கடன்­களை செலுத்த முடி­யாத நாடாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பிர­தா­ன­ப்ப­டுத்­தப்­பட்டுள்­ள­தாக பொரு­ளா­தார நிபு­ணர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். 

அதா­வது இலங்­கை­யா­னது தற்­போது பொரு­ளா­தார ரீதியில் வங்­கு­ரோத்து நிலையை அடைந்­தி­ருப்­ப­தாக பொரு­ளா­தாரத்துறை சார்ந்தோர் தெரி­விக்­கின்­றனர்.  அர­சியல் கட்­சி­களும் இதனை கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளன.   

அதா­வது இலங்கை  தற்­போது பொரு­ளா­தார ரீதியில் வங்­கு­ரோத்து நிலையை அடைந்­தி­ருப்­ப­தாக எதிர்க்­கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.  ஆனால் கடந்த காலம் முழு­வ­து­மாக அர­சாங்கம் இவ்­வாறு வெளி­நாட்டு கடன்­களை செலுத்­து­வதை நிறுத்த வேண்டும் என்று  வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது. 

காரணம் அந்த நிதியை வைத்து தற்­போது நாட்டில் காணப்­ப­டு­கின்ற அத்­தி­யா­வ­சிய பொருள் தட்­டுப்­பாட்­டுக்கு தீர்­வு­கா­ணலாம்.  அத்­தி­யா­வ­சிய பொருட்­களை இறக்­கு­மதி செய்­யலாம் என்ற விடயம் கூறப்­பட்டு வந்­தது.  அந்­த­வ­கையில் மத்­திய வங்­கியின் ஆளுநர்  நந்­தலால் வீர­சிங்க பல்­வேறு அதி­ரடி நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறார். 

முக்­கி­ய­மாக முத­லா­வ­தாக வட்டி வீதத்தை அதி­க­ரிக்கும் தீர்­மா­னத்தை அவர் எடுத்­தி­ருந்தார். 7 வீதத்­தி­லி­ருந்து 14.5 வீத­மாக வட்டி வீதத்தை அதி­க­ரித்தார். 

அதே­போன்று தற்­போது வெளி­நாட்டு கடன்­களை மீள் செலுத்­து­வதை இடை­நி­றுத்தியிருக்­கின்றார்.  அது­மட்­டு­மன்றி சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன்  விரை­வான முறையில் பேச்­சுக்­களை ஆரம்­பிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.  அத­ன­டிப்­ப­டையில் மத்­திய வங்­கியின் புதிய ஆளுநர்  நந்­தலால்  அதி­ர­டி­யான சில நட­வ­டிக்­கை­களை தொடர்ச்­சி­யாக மேற்­கொண்டு வரு­வதை காண­மு­டி­கி­றது. 

சர்­வ­தேச கடன்­களை செலுத்த முடி­யாது என்று ஒரு நாடு அறி­விப்பு செய்­வ­தா­னது பொரு­ளா­தார ரீதி­யான மிகவும் ஒரு பாத­க­மான அத­ல­பா­தா­ள­மான  நிலை­மையை எடுத்துக் காட்­டு­கின்­றது. 

இந்த நிலையில்  அவ்­வா­றான சூழலில் ஒரு நாடா­னது உட­ன­டி­யாக சர்­வ­தேச நாணய நிதி­யத்தை  நாடி பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.  சர்­வ­தேச நாணய நிதியம் இலங்­கை­யுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான உடன்­ப­டிக்­கை­ எட்­டப்­பட்­டதும் சர்­வ­தேச நிதி  நிறு­வ­னங்கள் மற்றும் சர்­வ­தேச நாடுகள் இலங்கை தொடர்­பான ஒரு ஆக்­க­பூர்­வ­மான நிலைப்­பாட்டை எடுக்கும். 

அதா­வது இலங்­கை­யா­னது சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன்  இணைந்து செயல்­ப­டு­வதால் இலங்கை கடன்­களை மீள் செலுத்­து­வதை தாம­தப்­ப­டுத்­து­வது பிரச்­சினை இல்லை என்ற ஒரு நிலைப்­பாட்­டுக்கு சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்கள் வரும்.   இலங்­கையின் கடன் நிலை­மையை எடுத்து நோக்கும் போது  வெளி­நாட்டு கடன்­க­ளு­ள் 60 வீத­மா­னவை இறைமை பிணை முறி­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன. 

அதா­வது இரு நாடு­க­ளுக்­கி­டையில் பெறப்­ப­டு­கின்ற கடன்­க­ளை­விட பிணை முறி­களின் ஊடாக பெறப்­ப­டு­கின்ற கடன்­களே  அதி­க­மாக இருக்­கின்­றன. 

எனவே அவற்றை மீள செலுத்­தாமல் இருப்­பது ஒரு பாத­க­மான நிலையை எடுத்­துக்­காட்டும்.  ஆனால் இலங்கை தற்­போது ஒரு நெருக்­க­டியில் இருக்­கின்­றது என்­ப­தாலும்  சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன்  இணைந்து இதற்கு தீர்வு காண  முயற்­சிகள் எடுப்­ப­தாலும்  இந்த பிரச்­சினை தொடர்­பாக சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்கள் சாத­க­மான நிலைப்­பாட்­டுக்கு வரலாம்.    

சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்­தாமல் ஒரு உடன்­பாட்­டுக்கு வராமல் உடன்­ப­டிக்­கையை செய்து கொள்­ளாமல் சர்­வ­தேச நாடு­க­ளுடன் சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த முடி­யாது.   எனவே இந்த தீர்­மா­னங்­களை இலங்கை அர­சாங்கம்  எடுத்­தி­ருக்­கின்­றது.   

இதே­வேளை சர்­வ­தேச கடன் தரப்­ப­டுத்தல்  நிறு­வ­ன­மான பிட்ச் நிறு­வனம் இலங்­கையின் கடன் செலுத்தும் இய­லு­மையை சிசி என்ற நிலை­யி­லி­ருந்து தற்­போது சி என்ற நிலைக்கு கொண்டு சென்­றுள்­ளது.   அதா­வது மேலும் இலங்­கையை கடன் மீள்  செலுத்தும் இடத்­தி­லி­ருந்து தர­மி­றக்­கி­யுள்­ளது. 

இந்த அறிக்கை  ஆச்­ச­ரி­ய­மா­னது அல்ல.  காரணம் இலங்­கையின் கடன் மீள் செலுத்த இய­லுமை ஸ்தம்­பித்­துள்­ளது. இலங்­கையே  தற்­போது கடன்­களை செலுத்த முடி­யாது என்று அறி­வித்­தி­ருக்­கி­றது.   பிட்ச் நிறு­வனம் என்­பது உலக நாடு­களின் பொரு­ளா­தார நிலைமை மற்றும் நிதி நிலைமை, டொலர் நிதி நிலைமை,  வெளி­நாட்டு கையி­ருப்பு மற்றும் அந்த நாட்­டினால் கடன்­களைப் பெற்றால்  கடன்­களை மீள்­செ­லுத்த முடி­யுமா என்­பது தொடர்­பாக மதிப்­பீடு செய்து குறி­காட்­டி­களை வெளி­யி­டு­கின்ற நிறு­வ­ன­மாக இருக்­கி­றது.  அத­ன­டிப்­ப­டையில் இலங்­கையின் வெளி­நாட்டு கடன்­களை மீள்­செ­லுத்தும் இய­லு­மை­யா­னது மிக மோச­மாக இருப்­ப­தாக பிட்ச் நிறு­வனம் தகவல் வெளி­யிட்­டி­ருக்­கி­றது.  

மேலும் மே மாதம் ஆகும்­போது  இந்­தியா வழங்­கிய ஒரு பில்­லியன் ரூபா நிதி­யு­தவி முடி­வ­டை­கின்­றது. அதனால் மே மாதம் முடிவின் பின்னர் இலங்­கைக்கு எரி­பொ­ருளை கொள்­வ­னவு செய்­வ­தற்கு டொலர் இல்லை.   எனவே ஜூன் மாதத்­தி­லி­ருந்து இலங்கை பாரி­ய­தொரு எரி­பொருள்  மற்றும் உணவு நெருக்­க­டியை எதிர்­கொள்ளும் என்று  முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­தி­ருக்­கின்றார். 

தற்­போது இலங்­கையில் கையி­ருப்பு மிகவும் குறை­வா­கவே இருக்­கி­றது. அதா­வது இலங்கை மத்­திய வங்­கி­யிடம் 2 பில்­லியன் டொலர் அள­வுக்கு வெளி­நாட்டு கையி­ருப்பு இருந்­தாலும்கூட அதில் பயன்­ப­டுத்தக்கூடிய இய­லுமை அல்­லது திர­வத்­தன்­மை­யா­னது மிகவும் குறை­வா­கவே காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

அது மிகவும் ஒரு அபா­ய­க­ர­மான நிலையில் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  அந்­த­வ­கையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறு­வது போன்று மே மாதம் முடிவின் பின்னர் இலங்கை மிகப்­பெரும் நெருக்­க­டியை சந்­திக்கும். அதா­வது அத்­தி­யா­வ­சிய பொருள் இறக்­கு­மதி மற்றும் எரி­பொருள் விட­யங்­களில் மிகப்­பெ­ரிய ஒரு சிக்­கலை எதிர்கொள்­ளக்­கூ­டிய நிலை­யி­லேயே இலங்கை உள்­ளது.   

இந்த நிலையில் இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச நாணய நிதி­யத்­து­ட­னான   பேச்­சு­வார்த்­தை­களை துரி­தப்­ப­டுத்தி விரை­வாக கடன்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.  தற்­போது நிதி அமைச்சர் சப்ரி மற்றும் மத்­திய வங்கி ஆளுநர்,  திறை­சேரி செய­லாளர் உள்­ளிட்டோர் 18ஆம் திகதி அமெ­ரிக்­கா­வின்­ நி­யூயோர்க் பய­ண­மாக இருக்­கின்­றனர். 

அங்கு சர்­வ­தேச நாணய நிதி­யத்தின்   பிர­தி­நி­தி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய நிதி­யு­தவி தொடர்­பாக ஆரா­ய­வுள்­ளனர்.  சர்­வ­தேச நாணய நிதியம் இலங்­கை­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இலங்கை தொடர்­பாக ஆராய்­வ­தற்கு ஒரு குழுவை நிய­மிக்கும். 

அந்த குழு இலங்கை வந்து நிலை­மை­களை ஆராய்ந்து நிபந்­த­னை­களை விதிக்கும்.  அந்த நிபந்­த­னை­களை இலங்கை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்ளும் பட்­சத்தில் மட்­டுமே சர்­வ­தேச நாணய நிதியம் இலங்­கைக்கு உத­வி­களை வழங்கும்.  அதன்­படி  இலங்­கை­யா­னது சர்­வ­தேச நாணய நிதி­யத்­திடம் 4 பில்­லியன் டொலர்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு எதிர்­பார்ப்­ப­தாக நிதி அமைச்சர் சப்ரி தெரி­வித்­தி­ருக்­கிறார். 

அவ்­வாறு ஜூன் மாத­மா­கும்­போது சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் கடன் உத­விகள் இலங்­கைக்கு வழங்­கப்­ப­டு­வ­தற்கு ஆரம்­பிக்­கப்­பட்டால் மட்­டுமே இலங்­கை­யினால் ஜூன் மாதத்­தி­லி­ருந்து அத்­தி­யா­வ­சிய சேவை­களை கொண்டு செல்ல முடியும்.  இல்­லா­விடில் மிகவும் நெருக்­க­டி­யான நிலைமை ஏற்­படும்.  அத்­தி­யா­வ­சிய தேவைகள்,   அத்­தி­யா­வ­சிய பொருள் வருகை தாம­த­ம­டையும்.  அது மேலும் நெருக்­க­டியை நாட்டில் ஏற்­ப­டுத்தும்.  

அது­மட்­டு­மன்றி இந்­தியா ஏற்­க­னவே வழங்­கிய ஒரு  பில்­லியன் டொலர் உதவி மே மாத இறு­தி­யுடன் முடி­வ­டை­கி­றது.  எனினும் தற்­போ­தைய நெருக்­கடி நிலையை கருத்­திற்­கொண்டு இந்­தி­யா­வா­னது இலங்­கைக்கு மேலும் 2 பில்­லியன் டொலர்­களை வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அந்த விடயம் இன்னும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை.  எப்­படியிருப்­பினும் இந்­தியா அந்த இரண்டு பில்­லி­யன்­களை வழங்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

அது­மட்­டு­மன்றி சீனா­விடம் இலங்கை 2.5 பில்லியன் டொலர் உத­வியை கோரி­யி­ருக்­கின்­றது.  அந்த உதவியை  சீனா வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  எனினும் அது தொடர்பாகவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.  இந்நிலையில் பொருளாதார ரீதியில் வெளிநாட்டு வர்த்தக விடயத்தில்  மிகப்பெரிய ஒரு நெருக்கடியான நிலையில் இலங்கை இருக்கின்றது. 

இது தொடர்பில் பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைகளை  முன்வைக்கின்றனர்.  சர்வதேச நிதி நிறுவனங்கள் தமது யோசனைகளை முன்வைக்கின்றன. கடந்த   பத்து மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடியிருந்தால் இவ்வாறு ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்பதே சகல தரப்பினராலும் கூறப்படுகின்ற விடயமாக இருக்கின்றது.   

இந்த பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு  பொருளாதார ரீதியான ஸ்திரத்தன்மை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அவசியமானது.  எனவே இது தொடர்பாக சகலரும் கவனம் செலுத்த வேண்டும். இந்த நெருக்கடி நிலைமை தொடர்பாக கவனம் செலுத்தி மக்களின் பிரச்சினைகளை நெருக்கடிகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும்.

எவ்வாறான பிரச்சினைகள் எமக்கு முன் இருக்கின்றன என்பது   தெரிகின்றது.   அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகள் எமக்கு தெரிகின்றன.   எனவே   சரியான முறையில்  தேவையான நடவடிக்கைகளை பிரயோகித்து விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதும் தீர்மானம் எடுப்பதுமே முக்கியமாக இருக்கின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22