நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரில் போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் வைத்திருந்த நபரை குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர் பலாங்கொடை - பெல்மதுல்லை பகுதியைச் சேர்ந்த 33 வயதான பட்டதாரி  என பொலிஸார் தெரிவித்தனர்.

பேஸ்புக் பக்கத்தில் ரவி கருணாநாயக்க லங்கா இன்டலிஜன்ஸ் (Ravi Karunanayake Lanka Intelligence)  எனவும், டுவிட்டர் பக்கத்தில் ரவிகேஒபீஸியல் (@RavikOfficial)  என்ற பெயரிலும் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, கடந்த 13 ஆம் திகதி நிதியமைச்சர் குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடொன்றை பதிவுசெய்திருந்தார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக  குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.